search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ரூ.20 லட்சம் பொருட்கள் நாசம்
    X

    மதுரையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ரூ.20 லட்சம் பொருட்கள் நாசம்

    மதுரையில் பிளாஸ்டிக் குடோனில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.

    மதுரை:

    மதுரை மேலமாசிவீதியில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருபவர் சதக்கத்துல்லா (வயது57). இவரது கடைக்கு சொந்தமான குடோன் காக்காதோப்பு சுப்புராயர் அக்ரஹாரத்தில் உள்ளது.

    நேற்று இங்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவியது. குடோனில் இருந்து கரும்புகை வெளியானதை பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கும், சதக்கத்துல்லாவுக்கும் தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் குடோனில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்புள்ள சின்டெக்ஸ் தொட்டிகள், பிளாஸ்டிக் பைப்புகள் உள்ளிட்டவை எரிந்து நாசமானது.

    இதுகுறித்து திடீர்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×