search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக்கோரி தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
    X

    டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக்கோரி தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

    குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளை மூடக்கோரி தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கூடலூர்:

    கூடலூர் நகரில் தேசிய நெடுஞ்சாலையோரம் செயல்பட்டு வந்த டாஸ்மாக் மதுக் கடைகள் அகற்றப்பட்டன. ஆனால் அகற்றப்பட்ட கடைகள் காளம்புழா பகுதியில் திறக்கப்பட்டன. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் குடியிருப்பு பகுதியில் திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூடக்கோரி கூடலூரில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    கூடலூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் லியாகத் அலி, தலைமை செயற்குழு உறுப் பினர் பாண்டியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் குடியிருப்பு பகுதியில் திறக்கப்பட்ட மதுக்கடைகளை மூட வேண்டும். கூடலூரில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். குப்பை தொட்டிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சந்தானம், ரசாக், ஜபருல்லா, இளஞ்செழியன், தாகீர், சுப்பிரமணியம், ரொனால்டு, வெண்ணிலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் கூடலூர் அருகே காளம்புழா பகுதியில் திறக்கப்பட்ட மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுக்கடைகளை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சகாதேவன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் துயில்மேகம், மாவட்ட செய்தி தொடர்பாளர் பிரகாஷ், இளைஞர் பாசறை மாவட்ட அமைப்பாளர் புவனேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நாடாளுமன்ற தொகுதி செயலாளர் ராஜேந்திர பிரபு, மகளிர் அணி காஞ்சனா, சுதாகர், முத்தையா, வேலுச்சாமி, சிவானந்தன் உள்பட பலர் கலந்து கொண்ட னர். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. முன்னதாக அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
    Next Story
    ×