search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் இல்லாத நிலத்தை காட்டி நண்பரிடம் ரூ.8 லட்சம் மோசடி
    X

    திருப்பூரில் இல்லாத நிலத்தை காட்டி நண்பரிடம் ரூ.8 லட்சம் மோசடி

    திருப்பூரில் நண்பரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் மலர்மன்னன் (வயது 45). இவரும் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (42) என்பவரும் 10 ஆண்டு கால நண்பர்கள். இந்த நிலையில் ராஜேந்திரனுக்கு சுப்பிரமணி என்பவர் அறிமுகம் ஆனார்.

    ராஜேந்திரனும் சுப்பிரமணியும் சேர்ந்து நண்பர் மலர்மன்னனிடம் சென்று சுப்பிரமணியின் மகனுக்கு வேலை வி‌ஷயமாக பணம் தேவைப்படுகிறது. அதனால் சுப்பிரமணியத்திற்கு சொந்தமாக நெருப்பெரிச்சலில் உள்ள 81 ž செண்டு நிலத்தை விற்பனை செய்ய உள்ளோம். வேண்டுமானால் நீங்கள் வாங்கிக்கொள்ளுகங்கள் என்று கூறினர்.

    நிலத்தை வாங்க நினைத்து மலர்மன்னன் நண்பர்களுடன் சேர்ந்து நெருப்பெரிசல் சென்றார். அங்கு இருந்த 81 ž செண்டு நிலத்தை பார்த்த பின்னர் ரூ.20 லட்சத்துக்கு நிலம் பேசப்பட்டது. அட்வான்சாக ரூ.8 லட்சத்தை நண்பர்களிடம் மலர்மன்னன் கொடுத்தார்.

    10 நாட்கள் கழிந்த பின்னர் மலர்மன்னன் வாங்க இருக்கும் இடத்திற்கு சென்றார். அங்கு நிலத்தை அளந்து பார்க்க முடிவு செய்தார். அப்போது சிலர் நிலம் எங்களுக்கு சொந்தம் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த மலர்மன்னன் இது குறித்து விசாரணை நடத்தினர்.

    அப்போது இல்லாத நிலத்தை காட்டி நண்பர்கள் தன்னை ஏமாற்றியது அறிந்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து நண்பர்களிடம் கேட்டபோது முறையாக பதில் கூறவில்லை. இதனையடுத்து அவர் திருப்பூர் மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துமாலை வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரன், சுப்பிரமணி ஆகியோரை கைது செய்தார். கைது செய்யப்பட்ட அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×