search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெங்கல் அருகே புதிய மதுக்கடை திறக்க எதிர்ப்பு-பெண்கள் மறியல்
    X

    வெங்கல் அருகே புதிய மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரியபாளையம்:

    வெங்கல் அருகே உள்ள தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் அரசு மதுபான கடை இயங்கி வந்தது. நீதிமன்ற உத்தரவின்படி இந்த மதுபான கடை அகற்றப்பட்டது.

    இதற்கு பதிலாக தாமரைப்பாக்கம்- திருநின்றவூர் நெடுஞ்சாலையில் தாமரைப்பாக்கம் ஊராட்சி அருகே உள்ள பூசாலிமேடு பகுதியில் புதிய மதுபான கடை திறக்க கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

    இதனை அறிந்த பூசாலி மேடு, மாகாரல்,எடைமேடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் புதிய கட்டிடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர், அவர்கள் தாமரைப்பாக்கம் - திருநின்றவூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    வெங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரிபூரணம் மற்றும் வருவாய் ஆய்வாளர் சரண்யா தலைமையில் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் மறியலை கை விட்டு கலைந்து சென்றனர்.பெரியபாளையம்:

    வெங்கல் அருகே உள்ள தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் அரசு மதுபான கடை இயங்கி வந்தது. நீதிமன்ற உத்தரவின்படி இந்த மதுபான கடை அகற்றப்பட்டது.

    இதற்கு பதிலாக தாமரைப்பாக்கம்- திருநின்றவூர் நெடுஞ்சாலையில் தாமரைப்பாக்கம் ஊராட்சி அருகே உள்ள பூசாலிமேடு பகுதியில் புதிய மதுபான கடை திறக்க கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.

    இதனை அறிந்த பூசாலி மேடு, மாகாரல்,எடைமேடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் புதிய கட்டிடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர், அவர்கள் தாமரைப்பாக்கம் - திருநின்றவூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    வெங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரிபூரணம் மற்றும் வருவாய் ஆய்வாளர் சரண்யா தலைமையில் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் மறியலை கை விட்டு கலைந்து சென்றனர்.
    Next Story
    ×