search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 15-ந்தேதி கிடைக்கும்
    X

    தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 15-ந்தேதி கிடைக்கும்

    பிளஸ்- 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை 15-ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். www.dge.tn.nic.in இணைய தளத்தில் பதிவெண், பிறந்த தேதியை குறிப்பிட்டால் பதிவிறக்கம் செய்யலாம்.
    சென்னை:

    பிளஸ்-2 தேர்வு முடிவு மாணவர்களின் செல்போன் வழியாகவும் வெளியிடப்பட்டது.

    பள்ளிகளிலும், இணையத்தளத்திலும், தனித்தேர்வு மையங்களிலும் தேர்வு முடிவை அறிந்து கொள்ள முடிந்தது. முதன் முதலாக கிரேடு முறையில் மதிப்பெண் பட்டியல் வெயிடப்படுகிறது.

    தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை 15-ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். www.dge.tn.nic.in இணைய தளத்தில் பதிவெண், பிறந்த தேதியை குறிப்பிட்டால் பதிவிறக்கம் செய்யலாம்.

    மேலும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தாங்கள் படித்த தேர்வு எழுதிய பள்ளி மையத்தின் தலைமை ஆசிரியர் மூலம் 17-ந்தேதி முதல் பெற்றுக் கொள்ளவும் என்று அரசு தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார்.

    பிளஸ்-2 மதிப்பெண் பட்டியலில் மாணவர், பள்ளியின் பெயர் இதுவரையில் ஆங்கிலத்தில் மட்டுமே இடம்பெறும். ஆனால் இந்த ஆண்டு தமிழிலும் இடம்பெறும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    விடைத்தாள் மறுகூட்டல் செய்யவும், விடைத்தாள் பாகம் பெறவும் இன்று முதல் 15-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஞாயிற்றுக்கிழமை விண்ணப்பம் பெற இயலாது. மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தேர்வு மையத்திலும் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

    விடைத்தாள் நகல் கேட்போர் அதே பாடத்திற்கு மறுகூட்டல் கேட்க கூடாது. விடைத்தாள் நகல் பெற்றவர்களுக்கு மறுகூட்டலுக்கும், மறு மதிப்புக்கும் விண்ணப்பிக்க தனியே வாய்ப்பு தரப்படும்.

    மறுகூட்டல், மறுமதிப்பீடுகளை ஒப்புகை சீட்டை பத்திரமாக வைக்க வேண்டும். அதில் உள்ள எண்ணை பயன்படுத்தியே மறு மதிப்பீடு முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும். ஜூன் இறுதியில் உடனடி துணைத்தேர்வு நடைபெறும். அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
    Next Story
    ×