search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்மார்ட் கார்டு திட்டம்: எஸ்.எம்.எஸ். வராதவர்கள் ரேஷன் கடையை அணுக வேண்டும்- கலெக்டர் அறிவுரை
    X

    ஸ்மார்ட் கார்டு திட்டம்: எஸ்.எம்.எஸ். வராதவர்கள் ரேஷன் கடையை அணுக வேண்டும்- கலெக்டர் அறிவுரை

    ஸ்மார்ட் கார்டு தொடர்பாக எஸ்.எம்.எஸ். வரப்பெறாதவர்கள் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்குச் சென்று குடும்ப விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என கலெக்டர் கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் தற்போது  நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக  ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை கரூர் மாவட்டத்திற்கு 1  லட்சத்து 42 ஆயிரத்து 706 ஸ்மார்ட் கார்டு குடும்ப அட்டைகள் வந்துள்ளன.

    இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஸ்மார்ட் கார்டு வரப்பெற்றவர்களின் பட்டியல் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டுக்கான எஸ்.எம்.எஸ். வரப் பெறாதவர்கள் சம்மந்தப்பட்ட ரேஷன் கடைக்கு சென்று குடும்ப விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

    மேலும் குடும்பத் தலைவரின் பெயர் மற்றும் உறவினர் பெயர் விவரங்கள் பிறந்த தேதி, முகவரி மற்றும் புகைப்படம் விடுபட்டவர்களுக்கு பட்டியல் ரேஷன் கடைகளில் ஒட்டப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு எஸ்.எம்.எஸ். வரப்பெறாதவர்கள் விடுபட்ட விவரங்கள் பட்டியல் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

    அதில் அவர்களுடைய குடும்ப அட்டை எண் இருப்பின் சரிபார்ப்பு குடும்பத் தலைவரின் பெயர் விவரம் பிறந்த தேதி, முகவரி மற்றும் புகைப்படம் ஆகியவற்றை ரேஷன் கடையில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து பணியாளரிடம் ஒப்படைக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×