search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல் தினசரி விலை நிர்ணயத்தை ஏற்றது ஏன்?: நாராயணசாமி விளக்கம்
    X

    பெட்ரோல் தினசரி விலை நிர்ணயத்தை ஏற்றது ஏன்?: நாராயணசாமி விளக்கம்

    புதுவையில் பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றியமைக்கும் மத்திய அரசின் திட்டத்தை ஏற்றது குறித்து முதலமைச்சர் நாராயணசாமி விளக்கமளித்துள்ளார்.
    புதுச்சேரி:

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணையின் விலை நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல்-டீசலுக்கு புதிய விலை நிர்ணயம் செய்யும் நடைமுறையை கொண்டுவர உள்ளனர்.

    முதலில் வருகிற 1-ந்தேதி முதல் சோதனை முறையில் சில நகரங்களில் மட்டும் அமல்படுத்துகிறார்கள். இதன்படி புதுச்சேரி, விசாகப்பட்டினம், உதயப்பூர், ஜாம்ஷெட்பூர், சண்டீகர் உள்ளிட்ட 5 நகரங்களில் நடைமுறைபடுத்தப்படுகிறது.

    புதுவையில் பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றியமைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு முதலமைச்சர் நாராயணசாமி எதிர்த்து வந்த நிலையில் தற்போது அந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.

    அதற்கான காரணம் குறித்து இன்று நாராயணசாமி விளக்கமளித்தார். அவர் கூறியதாவது:-


    முதலில் உழவர்கரை நகராட்சியில் மட்டுமே இந்த திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளதாக தெரிவித்திருந்தது. ஆனால் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் புதுவை முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்தினால் இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்வோம் என்று கோரிக்கை வைத்தனர்.

    இது குறித்து நான் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரிடம் பேசினேன் அவர் இந்த திட்டத்தை புதுவை முழுவதும் செயல்படுத்துவதாக ஒப்புக்கொண்டார். அதனால் இந்த திட்டத்தை நாங்கள் தற்போது ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த உள்ளோம்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார்.
    Next Story
    ×