search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் மாவட்டத்தில் ஆதார் அட்டையில் திருத்தம் செய்யும் வசதி
    X

    கரூர் மாவட்டத்தில் ஆதார் அட்டையில் திருத்தம் செய்யும் வசதி

    தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை திருத்தம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    கரூர்:

    தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் ஆதார் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களை திருத்தம் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டையில் திருத்தங்கள் ஏதும் செய்ய விரும்பினால், இம்மையங்களுக்குச் சென்று கைரேகை அல்லது கருவிழியினைப் பதிவு செய்து தங்களது பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை திருத்தம் செய்து கொள்ளலாம். மேலும், புகைப்படம், கைவிரல் ரேகை மற்றும் கருவிழி ஆகியவற்றையும் புதுப்பித்துக்கொள்ளலாம். அதற்கான சேவை கட்டண விவரம் பின் வருமாறு:

    1.ஆதார் பதிவு செய்தல் கட்டணமில்லை

    2. 5 மற்றும் 15 வயது முடிந்தவர்களுக்கான கட்டாய கைவிரல் ரேகை மறுபதிவு செய்தல் கட்டணமில்லை.

    3.நிலைப்புள்ளி விவரங்களை (பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி) திருத்தம் செய்வதற்கு ரூ.25.

    4.புகைப்படம், கைவிரல் ரேகை, கருவிழி புதுப்பிக்க ரூ.25.

    5.ஆதார் விவரங்களை தாளில் அச்சிட்டு பெற்றுக்கொள்வதற்கு ரூ.10.

    மேற்கண்ட நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் படிவங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. மேலும், பொது மக்கள் தவறாமல் ஒப்புகைச் சீட்டை மையத்தில் பணிபுரியும் தரவு உள்ளீட்டாளரிடமிருந்து கேட்டு பெற்றுக் கொள்ளவும். சேவை தொடர்பாக புகார் தெரிவிக்க வேண்டுமெனில் கட்டணமில்லா தொலை பேசி எண். 1800 425 2911ஐ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    இத்தகவலை கரூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×