search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கருவேல மரங்களை அகற்ற வேண்டும்: ராமநாதபுரம் கலெக்டர் உத்தரவு
    X

    கருவேல மரங்களை அகற்ற வேண்டும்: ராமநாதபுரம் கலெக்டர் உத்தரவு

    கண்மாய்களில் உள்ள காட்டுக் கருவேல் மரங்களை வேருடன் முழுமையாக அப்புறப்படுத்த நீர்வள ஆதாரத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் கீழ் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த நீர்வடிப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நயினார் கோவில் வட்டாரத்தில் ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் 15 நீர்வடிப்பகுதியில் 58 நீர்செறிவூட்டும் தண்டுகள் 17 ஊரணிகள் தூர்வாரும் பணிகள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு 11 நீர்செறிவூட்டும் தண்டுகள் மற்றும் 17 ஊரணிகள் தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டிருந்தன.

    கமுதி வட்டாரத்தில் ரூ.6.5 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் 10 நீர்செறிவூட்டும் தண்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டு 2 பணிகள் முடிக்கப்பட்டிருந்தன. மேலும், நயினார்கோயில் வட்டாரத்தில் 29 கண்மாய் தூர்வாரும் பணிகள் திட்டமிடப்பட்டு 24 பணிகள் முடிக்கப்பட்டிருந்தன.

    வேளாண்மை பொறியியல் துறை மூலம் ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரம், பாரானூர் கிராமத்தில் பிள்ளையார் கோவில் ஊரணி, திருப்புல்லாணி வட்டாரம் ஆலங்குளம் கிராமத்தில் புதுக்குளம் சின்னக் கண்மாய், ஆலங்குளம் கண்மாய் மற்றும் நல்லிருக்கை கிராமத்தில் நல்லிருக்கை கண்மாய் ஆகிய இடங்களில் குடிநீர் பயன்பாட்டுக்காக சிறு ஊரணிகள் அமைக்கும் பணி முடிக்கப்பட்டிருந்தன. ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரம், புல்லமடை கிராமத்தில் குருணிக்கச்சேரி ஊரணியில் வேலை நடைபெற்று வருகின்றன.

    நயினார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் மாவட்ட ஒருங்கிணைந்த நீர்வடிப்பகுதி மேம்பாட்டுத் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    இயற்கை வள மேம்பாட்டு பணியின் கீழ் பெருங்களூர் கிராமத்தில் ரூ. 1.5 லட்சம் திட்ட மதிப்பீட்டிலான ஐயனார் கோவில் ஊரணி ஆழப்படுத்தும் பணியினையும, ஆட்டாங்குடி கிராமத்தில் ரூ. 1.5 லட்சம் திட்ட மதிப்பிலான கண் மாய் தூர்வாரும் பணியினையும் மற்றும் ரூ.1.3 லட்சம் மதிப்பிலான இரண்டு நீர் செறிவூட்டும் தண்டுகள் பணியினை ஆய்வு செய்தார்.

    பொதுப்பணித்துறை, நீர்வள ஆதார அமைப்பு, முன்னாள் ஜமீன் தாரர்கள் கண்மாய் கோட்டம், காரைக்குடி கட்டுப்பாட்டில் நபார்டு நிதியில் நயினார்கோவில் வட்டாரத்தில் மருதூர் கண்மாய் (22.10 லட்சம் பணி மதிப்பீடு, ஆயக்கட்டு பரப்பு - 22.50 ஹெக்டேர்) குணன்குளம் கண்மாய் (38.70 லட்சம் மதிப்பீடு, ஆயக்கட்டு பரப்பு - ரூ. 39.11 ஹெக்டேர்) ஆகிய கண்மாய்களில் நடைபெறும் சீரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது கண்மாய்களில் உள்ள காட்டுக் கருவேல் மரங்களை வேருடன் முழுமையாக அப்புறப்படுத்த நீர்வள ஆதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    இந்த ஆய்வின் போது வேளாண்மைத்துறை இணை இயக்குநர் அரிவாசன், மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெள்ளைச்சாமி, வேளாண்மை அலுவலர் அம்பேத்குமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பாண்டி உள்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
    Next Story
    ×