search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடியாத்தம் அருகே மோர்தானா கால்வாய் தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பலி
    X

    குடியாத்தம் அருகே மோர்தானா கால்வாய் தண்ணீரில் மூழ்கி தொழிலாளி பலி

    குடியாத்தம் அருகே மோர்தானா கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி இறந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடியாத்தம்:

    மோர்தானா அணையில் தண்ணீர் திறக்கபட்டதால் குடியாத்தம் சேம்பள்ளி மோர்தானா கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஜிட்டபள்ளி கிராமத்தை சேர்ந்த சலீம்பாஷா (வயது 42) பீடி தொழிலாளி. இன்று காலை அங்குள்ள மோர்தானா கால்வாய் அருகே காலைக்கடன் கழிக்க சென்றார்.

    அப்போது தவறி விழுந்தார். அவரை வெள்ளம் வேகமாக இழுத்து சென்றது. இதனைக்கண்ட பொதுமக்கள் கூச்சலிட்டனர். ஆனால் வெள்ளத்தில் மூழ்கிய சலீம்பாஷா தண்ணீரில் மூழ்கினார். அவரை தேடும் பணியில் பொதுமக்கள் கால்வாய் ஓரமாக தேடி சென்றனர்.

    ஜிட்டபள்ளி கிராமத்தில் இருந்து 3 கி.மீ தூரத்தில் சலீம்பாஷா சடலமாக மீட்கபட்டார். குடியாத்தம் தாலுகா போலீசார் உடலை கைபற்றி குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சலீம்பாஷாவுக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    நேற்று சீவூர் ஊராட்சி கல்லூரை சேர்ந்த பெயிண்டர் பெருமாள் என்பவர் கவுண்டன்ய நதியில் மூழ்கி இறந்தார். இன்று 2-வதாக சலீம்பாஷா பலியானார்.

    இதனால் மோர்தானா கால்வாய், ஆற்றில் பொதுமக்கள் ஆழமான பகுதியில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கபட்டுள்ளனர்.

    Next Story
    ×