search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4 எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - முன்னாள் ரெயில்வே ஊழியருக்கு வலைவீச்சு
    X

    4 எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - முன்னாள் ரெயில்வே ஊழியருக்கு வலைவீச்சு

    சென்னை சென்டிரல் ரெயில் நிலைய மேலாளருக்கு வந்த கடிதத்தில் 4 எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக முன்னாள் ரெயில்வே ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.
    சென்னை:

    சென்னை சென்டிரல் ரெயில் நிலைய மேலாளருக்கு நேற்று காலை ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தில், மாவோயிஸ்டு இயக்கத்தின் பேரில் அரக்கோணம் மார்க்கமாக செல்லும் மங்களூரு, நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கும், மேல்மருவத்தூர் மார்க்கமாக செல்லும் முத்துநகர், நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு இருந்தது.

    அத்துடன் அந்த கடிதத்தில் 5 செல்போன் எண்கள் எழுதப்பட்டு இருந்தது. கடிதத்தை கைப்பற்றி, ரெயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினர்.

    அதில் இருந்த செல்போன் எண்ணை தொடர்புகொண்டபோது, அரக்கோணத்தைச் சேர்ந்த அசோக்குமார் என்பவர் பேசினார். போலீசார் அவரை அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அசோக்குமாரின் சித்தப்பாவான மேல்மருவத்தூரைச் சேர்ந்த முன்னாள் ரெயில்வே ஊழியர் கங்காதரன் (வயது 59) என்பவர், குடும்ப பிரச்சினை காரணமாக அண்ணன் மகனான அசோக்குமாரை பழி வாங்க அந்த மர்ம கடிதத்தை அனுப்பியது தெரியவந்தது.

    இதேபோல் கடந்த 2013-ம் ஆண்டு கங்காதரன் குடும்ப பிரச்சினை காரணமாக ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கங்காதரனை தேடி வருகின்றனர்.


    Next Story
    ×