search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முத்தூர் அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
    X

    முத்தூர் அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

    முத்தூர் அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
    முத்தூர்:

    தமிழகம் முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் 500 மீட்டர் தொலைவிற்குள் இருந்த டாஸ்மாக் கடைகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி திருப்பூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த 164 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனை தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை வேறு பகுதிகளில் அமைக்க டாஸ்மாக் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் முத்தூர்– வெள்ளகோவில் ரோட்டில் முத்துமங்களம் பஸ் நிறுத்தம் அருகில் செயல்பட்டு வந்த மூடப்பட்ட டாஸ்மாக் கடை முத்தூர்– ஊடையம் மெயின்ரோடு மலையத்தாபாளையம் பெரியகரை பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தில் மாற்றி அமைக்க டாஸ்மாக் நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
    ஆர்ப்பாட்டம்

    இது பற்றி தகவல் அறிந்த மலையத்தாபாளையம், சோத்திக்காடு, சீனிவாசாநகர் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 100–க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் நேற்று முன்தினம் மாலை திரண்டு சென்று டாஸ்மாக் கடை அமைக்கப்பட உள்ள புதிய கட்டிடத்தின் முன்பு நின்று எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் கடை அமைப்பதை உடனடியாக கைவிடக்கோரி கையில் பதாகைகளுடன் கோ‌ஷங்களை எழுப்பியபடி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    பின்னர் இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதை கைவிட கோரி தமிழக அரசு, மாவட்ட கலெக்டர் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளிப்பது என்று முடிவு செய்து அமைதியாக கலைந்து சென்றனர்.

    Next Story
    ×