search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் ரெயில் மறியல் போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது
    X

    தஞ்சையில் ரெயில் மறியல் போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது

    தஞ்சையில் ரெயில் மறியல் போராட்டம் நடத்திய விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். விவசாயிகளின் அனைத்து கடன்களையும் ரத்து செய்ய வேண்டும். காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு மற்றும் சாலை மறியல் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது.

    தஞ்சையில் தமிழக காவிரி விவசாய சங்கத்தினர் மாநில தலைவர் புண்ணியமூர்த்தி தலைமையில் இன்று காலை 10.15 மணிக்கு வாஸ்கோடாகாமா - வேளாங்கண்ணி செல்லும் ரெயிலை மறிப்பதற்காக சென்றனர். இந்த நிலையில் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் பேரிகார்டுகளை வைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து விவசாய சங்கத்தினர் தஞ்சை ரெயில் நிலையம் முன்பு கோ‌ஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் தஞ்சை ரெயில் நிலையத்தின் முதல் தளத்தில் 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திருச்சி - சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறிப்பதற்காக தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்து வந்தபோலீசார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது போலீசாருக்கும் விவசாயிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் அவர்களை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    தஞ்சை தலைமை தபால் நிலையத்தை காவிரி உரிமை மீட்புக்குழுவினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மணிமொழியன் தலைமை தாங்கினார்.

    இதில் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன், தமிழர் தேசிய முன்னனி பொதுச் செயலாளர் அய்யனாபுரம் முருகேசன், ஐ.ஜே.கே. மாவட்ட தலைவர் சிமியோன் சேவியர்ராஜ் உள்பட 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×