search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோடு-பவானி பகுதியில் அதிக விலைக்கு மது விற்ற 7 பேர் அதிரடி கைது
    X

    ஈரோடு-பவானி பகுதியில் அதிக விலைக்கு மது விற்ற 7 பேர் அதிரடி கைது

    ஈரோடு, கருங்கல்பாளையம், பவானி போலீஸ் நிலைய பகுதிகளுக்குள் அதிக விலைக்கு மது விற்றதாக ஒரே நாளில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு சுத்தானந்தன் நகர் பின்புறம் உள்ள காலி இடத்தில் சூரம்பட்டியை சேர்ந்த சுரேஷ் (வயது 38) அரசு அனுமதியின்றி 10 மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தார். இதைத் தொடர்ந்து அவரை ஈரோடு தெற்கு போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு மாணிக்கம்பாளையம், வி.என்.எம். நகரில் சூரம்பட்டிவலசை சேர்ந்த குமார் (32) என்பவர் 3 மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தார். இதைத் தொடர்ந்து அவரை ஈரோடு வடக்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வெரோனிகா கைது செய்தார்.

    ஈரோடு திண்டலில் உள்ள மளிகை கடை அருகில் திண்டல் ரோடு புதுக் காலனியை சேர்ந்த சுகுமார் டேவிட் என்பவர் 8 மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தார். இதைத்தொடர்ந்து அவரை ஈரோடு தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் கைது செய்தார்.

    ஈரோடு வில்லரசம்பட்டி சாணார்பாளையம் கருப்ப ராயன் கோவில் அருகே கிட்டுசாமி (62) என்பவர் 5 மதுபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தார். இதைத்தொடர்ந்து அவரை ஈரோடு வடக்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மதிவாணன் கைது செய்தார்.

    ஈரோடு கருங்கல்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் கருங்கல்பாளையம் கிருஷ்ணன் வீதியை சேர்ந்த காஜா உசேன்(26) என்பவர் 6 மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தார். இதைத் தொடர்ந்து அவரை கருங்கல்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசு கைது செய்தார்.

    ஈரோடு கிருஷ்ணம்பாளையம் கருப்பராயன் கோவில் அருகே காமாட்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்த இளங்கோ (45) என்பவர் 6 மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தார். இதைத் தொடர்ந்து அவரை கருங்கல்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோமதி கைது செய்தார்.

    பவானி-மேட்டூர் ரோடு ஊராட்சி கோட்டை, எம். ஜி.ஆர். நகரில் ராமநாதன் (63) என்பவர் 5 மது பாட் டில்களை விற்பனைக்கு வைத்திருந்தார். இதைத் தொடர்ந்து அவரை பவானி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் ரகிமான் கைது செய்தார்.

    Next Story
    ×