search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அவினாசி பகுதியில் சூறாவளி காற்றில் மின் கம்பங்கள் சேதம்
    X

    அவினாசி பகுதியில் சூறாவளி காற்றில் மின் கம்பங்கள் சேதம்

    அவினாசி பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்ததில் மின் கம்பங்கள் சேதம் அடைந்தன. மேலும் வாழை மரங்கள் முறிந்து நாசமானது.

    அவினாசி:

    அவினாசி பகுதிகளில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் கருவலூர் பகுதியில் வீடுகளின் மேற் கூரை தூக்கி வீசப்பட்டது. மேலும் வாழை மரங்கள் முறிந்து நாசமானது.

    இதேபோல் சின்ன கானூர் பகுதி சல்லி தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து அதே பகுதியை சேர்ந்த விவசாயி பழனிச்சாமி கூறியதாவது:-

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு பலத்த சூறாவளி வீசியதில் 3 மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. அப்போது அந்த வழியாக சென்ற 2 ஆட்டு குட்டிகள் மின்சாரம் தாக்கி பலியானது.

    மேலும் இந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருளில் மூழ்கியுள்ளது. ஆடு- மாடுகளுக்கு தண்ணீர் வைக்க கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க முடிவதில்லை. மின் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டதால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம்.எனவே உடனடியாக மின் கம்பங்களை மாற்றியமைத்து மின்சாரம் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×