search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தல்: புதுவையிலும் இன்று வாக்குப்பதிவு
    X

    பிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தல்: புதுவையிலும் இன்று வாக்குப்பதிவு

    புதுவையிலும் பிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
    புதுச்சேரி:

    பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 1954-ம் ஆண்டு புதுவை சுதந்திரம் அடைந்தது. அப்போது வசித்த புதுவை மக்கள் பலருக்கு பிரான்ஸ் நாடு குடியுரிமை வழங்கியது. இந்த மக்கள் பிரான்ஸ் மற்றும் இந்திய ஆகிய இரு நாடுகளின் இரட்டை குடியுரிமை பெற்றவர்களாக உள்ளனர்.

    இவர்களுக்கு பிரான்சில் நடக்கும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை இருக்கிறது. சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குரிமை பெற்றவர்கள் புதுவையில் தற்போது உள்ளனர்.

    பிரான்ஸ் நாட்டு அதிபர் தேர்தல் இன்று நடந்தது. அதில் அவர்கள் வாக்களித்தனர்.

    இத்தேர்தலில் பிராங்கோயிஸ் பைலான், பெனாய்ட் ஹாமன், மரைன் லி பென், இம்மானுவேல் மக்ரான், ஜீன் லக் மெலன்சினான் உள்ளிட்ட 5 முக்கிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதல் சுற்று வாக்குப்பதிவு இன்று (ஞாயிற்றுக் கிழமை) நடைபெற்றது.

    இத்தேர்தலில் புதுவையில் உள்ள பிரான்ஸ் துணை தூதரகத்துக்குட்பட்ட புதுவை, தமிழகம், கேரளம், அந்தமான் நிகோபார், லட்சத்தீவுகள் பகுதிகளில் வசிக்கும் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். இதற்காக 6 மையங்களில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    புதுவை துணை தூதரகம், அலையன்ஸ் பிரான்சிஸ் வளாகத்தில் தலா 2 மையங்களும், காரைக்கால், சென்னையில் தலா ஒரு மையமும் அமைக் கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    இன்று நடைபெற்ற வாக்குப்பதிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டால் முதல் 2 இடம் பெறும் வேட்பாளர்களில் அதிபரை நிர்ணயிப்பதற்கான 2-ம் சுற்று வாக்குப்பதிவு வருகிற 7-ந் தேதி நடைபெறும்.
    Next Story
    ×