search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணகிரியில், கோரிக்கைகளை வலியுறுத்தி பாடை கட்டி, ஒப்பாரி வைத்து விவசாயிகள் போராட்டம்
    X

    கிருஷ்ணகிரியில், கோரிக்கைகளை வலியுறுத்தி பாடை கட்டி, ஒப்பாரி வைத்து விவசாயிகள் போராட்டம்

    கிருஷ்ணகிரி அருகில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பாடை கட்டி, ஒப்பாரி வைத்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
    கிருஷ்ணகிரி:

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கடந்த 17-ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

    4-வது நாளாக நேற்று நடந்த போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தளி ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இதில் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் லெனின், அகில இந்திய விவசாய சங்க மாநில துணைத் தலைவர் லகுமய்யா, தமிழ்நாடு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் நரசிம்மன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் பழனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த போராட்டத்தின் போது வறட்சியால் விவசாயிகள் இறந்து வருவதை சித்தரிக்கும் வகையில், பாடை கட்டியும், ஒப்பாரி வைத்தும், இறுதி சடங்கு செய்து, அருகில் உள்ள சின்ன ஏரிக்கு மேளம் முழங்க, சங்கு ஊதியவாறு பாடையை ஊர்வலமாக எடுத்து சென்று, அந்த பாடையின் மீது காய்ந்து போன விவசாய பயிர்களை போட்டு எரித்தனர். பின்னர் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
    Next Story
    ×