search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் 7 பேருக்கு ஒரே நாளில் நவீன இருதய சிகிச்சை
    X

    ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் 7 பேருக்கு ஒரே நாளில் நவீன இருதய சிகிச்சை

    ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 2½ வயது சிறுவன் உள்பட 7 பேருக்கும் ஒரே நாளில் அறுவை சிகிச்சை இன்றி நவீன முறையில் இருதய சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.
    ராயபுரம்:

    தண்டையார்பேட்டையை சேர்ந்த 2½ வயது சிறுவன் இம்மானுவேல். இருதயத்தில் ஓட்டையால் பாதிக்கப்பட்டு இருந்தான்.

    இதேபோல் நத்தத்தை சேர்ந்த கன்னியப்பன், அடையாறு பானுமதி, கொளத்தூர் உமாமகேஸ்வரி, வியாசார்பாடி சாமூண்டீஸ்வரி, காஞ்சீபுரம் உதயகுமார் உள்ளிட்ட 6 பேரும் இதய ஓட்டையால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் அனைவரும் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்த நிலையில் சிறுவன் இம்மானுவேல் உள்பட 7 பேருக்கும் ஒரே நாளில் அறுவை சிகிச்சை இன்றி நவீன முறையில் இருதய சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர்.

    இருதய அறுவை சிகிச்சை பேராசிரியர்கள், டாக்டர்கள் கண்ணன், மூர்த்தி ஆகியோர் தலைமையில் நவீன முறையில் 7 பேருக்கும் இருதய சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர்கள் நலமாக உள்ளனர்.

    இதுகுறித்து ஆஸ்பத்திரி டீன் பொன்னம்பலம் நமச்சிவாயம் கூறும்போது, இருதய கோளாறுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது இந்த 7 பேருக்கும் ஒரே நாளில் அறுவை சிகிச்சை இன்றி ‘கேத் லேப்’ என்ற நவீன முறையில் இருதய சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது’’ என்றார். அப்போது நிலைய அலுவலர் ரமேஷ் உடன் இருந்தார்.
    Next Story
    ×