search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அண்ணாசாலை நட்சத்திர ஓட்டல்கள்- பார்களில் மது விற்பனை நீடிக்கும்
    X

    அண்ணாசாலை நட்சத்திர ஓட்டல்கள்- பார்களில் மது விற்பனை நீடிக்கும்

    சென்னையில் உள்ள அண்ணா சாலை தேசிய நெடுஞ்சாலை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு மாநகராட்சி சாலையாக மாற்றப்பட உள்ளதால் அங்குள்ள நட்சத்திர ஓட்டல் பார்கள் மற்றும் மதுக்கடைகள் தொடர்ந்து நீடிக்கும் வாய்ப்பு உள்ளது.
    சென்னை:

    நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து நெடுஞ்சாலைகளில் இயங்கிய மதுக்கடைகள் மூடப்பட்டன.

    சென்னை அண்ணா சாலையில் உள்ள மதுக்கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் இயங்கி வந்த பார்கள் மூடப்பட்டன. இதனால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக 100-க்கும் மேற்பட்ட நட்சத்திர ஓட்டல்களில் இயங்கி வந்த பார்கள் மூடப்பட்டுள்ளன.

    இந்த பார்கள் மூடப்பட்டுள்ளதால் தினமும் ஓட்டல்களுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தென்சென்னையில் 28 டாஸ்மாக் மதுக்கடைகளும், மத்திய சென்னையில் 30 கடைகளும், வடசென்னையில் 10 கடைகளும் மூடப்பட்டன.

    இதனால் ஆண்டுக்கு ரூ.4500 கோடி அளவுக்கு வருமான இழப்பு ஏற்படும்.

    இந்த வருமான இழப்பை தவிர்க்க அண்ணா சாலையை தேசிய நெடுஞ்சாலை பட்டியலில் இருந்து நீக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் 100 அடி சாலை ஆகியவை மாநகராட்சி சாலையாக மாற்றப்பட உள்ளன.

    மாவட்ட பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மாவட்ட சாலைகளாக மாற்றப்பட உள்ளன.

    மேற்கு வங்காளத்தில் 278 கிலோ மீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை கடந்த 10 நாட்களுக்கு முன்பு நகராட்சி சாலையாக மாற்றப்பட்டது.

    அதே போல ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளும் அந்த மாநிலத்துக்குட்பட்ட மாநகராட்சி சாலையாகவோ, மாவட்ட சாலையாகவோ மாற்றப்பட உள்ளன. இதற்கான அதிகாரம் அந்தந்த மாநில அரசுகளுக்கு உள்ளன.

    அதன் அடிப்படையில் சென்னையில் உள்ள அண்ணா சாலை தேசிய நெடுஞ்சாலை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு மாநகராட்சி சாலையாக மாற்றப்பட உள்ளதால் அங்குள்ள நட்சத்திர ஓட்டல் பார்கள் மற்றும் மதுக்கடைகள் தொடர்ந்து நீடிக்கும் வாய்ப்பு உள்ளது.
    Next Story
    ×