search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    8 எம்.எல்.ஏ.-க்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவு
    X

    8 எம்.எல்.ஏ.-க்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவு

    டிடிவி தினகரன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரின் ஈடுபாடு கட்சியின் மீது இருக்காது என்று அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்தார். இந்நிலையில், டிடிவி தினகரனுக்கு 8 எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுக கட்சியில் இருந்து தினகரன் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த யாரும் கட்சியின் மீது ஈடுபாடு செலுத்த முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், டிடிவி தினகரனுக்கு ஆதரவாக 8 எம்.எல்.ஏ-க்கள் அவரை சந்தித்து பேசியுள்ளனர். அமைச்சர்கள் தங்க தமிழ்ச் செல்வன், ஜக்கையன், கதிர்காமு, வெற்றிவேல், சாத்தூர் சுப்பிரமணியம், செல்வ மோகன்தாஸ், ஏழுமலை, சின்னதம்பி உள்ளிட்டோர் அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்திற்கு சென்று ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    மேலும் தளவாய் சுந்தரம், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோரும் டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×