search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாளை முதல் ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வசதி: புகைப்படங்களையும் புதுப்பிக்கலாம்
    X

    நாளை முதல் ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வசதி: புகைப்படங்களையும் புதுப்பிக்கலாம்

    நாளை முதல் ஆதார் மையங்களில் ஏற்கனவே ஆதார் எண் பெற்றுள்ளவர்கள் தங்களது ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ள விவரங்களை திருத்தம் செய்யும் வசதி 17-ந்தேதி முதல் வழங்கப்பட உள்ளது.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.நிறுவனம், தமிழகம் முழுவதும் 303 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது.

    தலமைச் செயலகம், அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், பெருநகர சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம் (ரிப்பன் மாளிகை), பெருநகர மாநகராட்சியின் மண்டல அலுவலகங்கள், வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் ஏற்கனவே ஆதார் எண் பெற்றுள்ளவர்கள் தங்களது ஆதார் அட்டையில் குறிப்பிட்டுள்ள விவரங்களை திருத்தம் செய்யும் வசதி 17-ந்தேதி முதல் வழங்கப்பட உள்ளது.


    எனவே பொதுமக்கள் கைரேகை அல்லது கரு விழியினைப் பதிவு செய்து தங்களது பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை திருத்தம் செய்து கொள்ளலாம். மேலும் புகைப்படம், கைவிரல் ரேகை மற்றும் கருவிழி ஆகியவற்றையும் புதுப்பித்துக் கொள்ளலாம். அதற்கான சேவைக் கட்டண விவரம் வருமாறு:-

    ஆதார் பதிவு செய்தல்-கட்டணமில்லை. 5 மற்றும் 15 வயது முடிந்தவர்களுக்கான கட்டாய கைவிரல் ரேகை மறுபதிவு செய்தல்-கட்டணமில்லை.


    நிலைப்புள்ளி விவரங்களை (பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி, கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி) திருத்தம் செய்வதற்கும் மற்றும் புகைப்படம், கைவிரல் ரேகை, கருவிழி புதுப்பிக்க -ரூ.25. ஆதார் விவரங்களை தாளில் அச்சிட்டு பெற்றுக் கொள்வதற்கு ரூ.10.

    மேற்கண்ட நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் படிவங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. மேலும் பொது மக்கள் தவறாமல் ஒப்புகைச் சீட்டை மையத்தில் பணி புரியும் தரவு உள்ளீட்டாளரிடம் இருந்து கேட்டு பெற்றுக் கொள்ளவும். சேவை தொடர்பாக புகார் தெரிவிக்க வேண்டுமெனில் கட்டணமில்லா தொலை பேசி எண். 18004252911-ஐ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×