search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம் அடைந்த 20 காவலர்களுக்கு முதலமைச்சர் இரங்கல்: நிதியுதவியும் அறிவிப்பு
    X

    மரணம் அடைந்த 20 காவலர்களுக்கு முதலமைச்சர் இரங்கல்: நிதியுதவியும் அறிவிப்பு

    தமிழகத்தில் மரணம் அடைந்த 20 காவலர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவியும் அறிவித்தார்.
    சென்னை:

    சாலை விபத்து, உடல்நலக் குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மரணம் அடைந்த காவலர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், தமிழ்நாடு சிறப்பு காவல் 11-ம் அணி, காவலர் எப்.ஜமீல் ரகுமான், தருமபுரி மாவட்டம், அ. பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த கே.சரவணன், மதுரை மாநகரம், மதுரை தெற்கு வாசல் காவல் நிலையத்தில், தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த எம்.ஆறுமுகம், நாமக்கல் மாவட்டம்,  வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த எஸ்.பாரதி,

    தேனி மாவட்டம், தென்கரை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த எஸ்.வைரமணி, திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த உள்ளன்புடையார், திருப்பூர் மாவட்டம், குமரலிங்கம் காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சௌந்தரராஜன், தஞ்சாவூர் மாவட்டம், ஆயுதப்படை, மோட்டார் வாகன பிரிவு, தலைமைக் காவலர் த. ராமநாதன்,

    மதுரை மாநகரம், ஆயுதப்படை 2-ம் படைப்பிரிவில் இரண்டாம் நிலைக்காவலராகப் பணிபுரிந்து வந்த எம்.ராஜதுரை,  தூத்துக்குடி மாவட்டம், ஆயுதப்படை, தலைமைக் காவலர் எம்.எஸ்.முருகன், கடலூர் மாவட்டம், சிதம்பரம் போக்குவரத்து காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஆர். செல்வராஜ்,

    ஈரோடு மாவட்டம், அந்தியூர் காவல் நிலையத்தில், சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கே.மோகனசுந்தரம்,
    திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை ஆயுதப் படை, முதல் நிலைக் காவலர் எஸ். பரமசிவன். கரூர் மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சி. கணேசன், கோயம்புத்தூர் மாநகரம், சிங்காநல்லூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில், உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ப. அய்யாசாமி,

    காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் போக்குவரத்து காவல் பிரிவில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த டி.முருகன், தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த மோகன்ராஜ், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த காவலர் சி. வைகுந்தராமன்,

    சேலம் மாநகரம், மாநகர குற்றப்பதிவேடு கூடத்தில், தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த பி.ஜெயலட்சுமி, காஞ்சிபுரம் மாவட்டம்,  மாமல்லபுரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, தலைமைக் காவலர் ஆர்.ஜெயசந்திரன் ஆகியோர் காலமானார்கள் என்ற செய்தி அறிந்து மிகவும் துயரமடைந்ததாக முதல்வர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    மேற்கண்ட 20 காவலர்களின் அகால மரணத்தால் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அவர்களது குடும்பங்களுக்கு  தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்ததுடன், அவர்களது குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டிருப்பதாகவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.

    Next Story
    ×