search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரேஷன் கார்டுகளை ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றும் பணி குறித்த பயிற்சி வகுப்பு
    X

    ரேஷன் கார்டுகளை ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றும் பணி குறித்த பயிற்சி வகுப்பு

    கரூர் மாவட்டத்தில் ரேஷன் கார்டுகளை ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றும் பணி குறித்த பயிற்சி வகுப்பு கலெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.
    கரூர்:

    கரூர் மாவட்ட கலெக்டர் கூடுதல் கட்டடத்தில் கூட்டுறவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை சார்பில் குடும்ப அட்டைகளை மின்னணு அட்டைகளாக வழங்கும் பணியில் ஈடுபடவுள்ள கூட்டுறவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது.

    இப்பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து கலெக்டர் தெரிவித்ததாவது:-

    1.4.2017 முதல் ஒவ்வொருவரது வாழ்விலும் ஆதாரமாக விளங்கும் குடும்ப அட்டைகளை (ரேஷன் கார்டு) மின்னணு அட்டைகளாக (ஸ்மார்ட் கார்டு) வழங்கப்படவுள்ளது.  குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், உறுப்பினர் சேர்க்கை, உறுப்பினர் நீக்கம் உள்ளிட்ட 7 வகையான பணிகளை ஆன்ட்ராய்டு மொபைல் மற்றும் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பதாரர்கள் தாங்களே செய்து கொள்ளலாம். 

    இந்த பணியை உள்வாங்கி செய்யக்கூடிய நீங்கள் கணினி மற்றும் ஆன்லைன் ஆளுமைத்திறன் படைத்தவர்களாக இருக்க வேண்டும். மேலும், ஒவ்வொருவரது வாழ்விலும் மிக முக்கிய அங்கம் வகிக்கும் குடும்ப அட்டைகளை மின்னணு அட்டைகளாக மாற்றும்போது சரியாக தகவல்களை பதிவு செய்வது உங்களது கடமையாகும். இப்பணியை செவ்வனே செய்து மாநிலத்தில் சிறப்பான மாவட்டமாக கரூர் மாவட்டத்தை உருவாக்கித்தர வேண்டுமென கலெக்டர் கேட்டுக் கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில், மாவட்டத்திலுள்ள அனைத்து நியாய விலைக்கடைகளிலும் பொதுமக்களுக்கு உதவிட ஏதுவாக புகார் மற்றும் தகவல் தெரிவிக்கும் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை கலெக்டர் வெளியிட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் மற்றும் அவர்களது துறையினர் பெற்றுக் கொண்டனர்.

    இப்பயிற்சி வகுப்பில் மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சீனிவாசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், துணை பதிவாளர் லோகநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×