search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரம் அருகே ரேசன் கடைகளில் கலெக்டர் நடராஜன் ஆய்வு
    X

    ராமநாதபுரம் அருகே ரேசன் கடைகளில் கலெக்டர் நடராஜன் ஆய்வு

    ராமநாதபுரம் அருகே பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் ரேசன் கடைகளில் கலெக்டர் நடராஜன், நேரடியாகச் சென்று திடீர் ஆய்வு மேற் கொண்டார்.
    ராமநாதபுரம்:

    தமிழ்நாடு அரசு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்களை வழங்கி வருகின்றது. மேலும் வருகின்ற ஏப்ரல் 1-ந்தேதி முதல் நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளை ஸ்மார்ட் கார்டுகளாக வழங்கிட உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் கலெக்டர் நடராஜன், பட்டணம் காத்தான், ஓம்சக்தி நகர், அரண்மனை சாலை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் ரேசன் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் உறுப்பினர்களின் கைப்பேசி எண், ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை நியாய விலைக்கடைகளில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள மின்னனு கருவியில் 100 சதவிதம் பதிவு செய்வதை உறுதி செய்திட வேண்டுமெனவும், பொது மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை போதிய அளவில் கணக்கிட்டு இருப்பு வைப்பதோடு பொதுமக்கள் சிரமமின்றி பெற்று பயனடையும் வகையில் பணியாற்றிட வேண்டு மெனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது, மாவட்ட வழங்கல் அலுவலர் மதியழகன், வட்ட வழங்கல் அலுவலர் சாந்தி ஆகியோர் உடனிருந்தனர்.
    Next Story
    ×