search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாடு, புதுச்சேரியில் 3-ந்தேதி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு: கூட்டமைப்பு தலைவர் பேட்டி
    X

    தமிழ்நாடு, புதுச்சேரியில் 3-ந்தேதி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு: கூட்டமைப்பு தலைவர் பேட்டி

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வருகிற ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.கே.வேல் கூறினார்.
    நாமக்கல்:

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.கே.வேல் நேற்று நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அகில இந்திய சட்ட ஆணையத்தின் சட்ட திருத்த பரிந்துரைகள், வக்கீல்களின் உரிமைகளை பாதிக்கும் வகையிலும், வக்கீல்களை மிரட்டும் தோரணத்திலும் மற்றும் வக்கீல்கள் சுதந்திரமாக தொழில் செய்ய முடியாத நிலையிலும் இருப்பதால், அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அகில இந்திய பார் கவுன்சில் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    அந்த முடிவை ஏற்றுக் கொண்டு வருகிற ஏப்ரல் மாதம் 3-ந் தேதி (திங்கட் கிழமை) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கூட்டமைப் பின் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

    மேலும் அன்று அந்தந்த கோர்ட்டுகள் முன்பு நண்பகல் 12 மணி அளவில் ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் ஈடுபட உள்ளனர். வக்கீல்களின் தொழிலை பாதிக்கின்ற சட்ட பரிந்துரைகளை ஆணையம் திரும்ப பெறாவிட்டால், கூட்டமைப்பின் செயற்குழு கூட்டத்தை கூட்டி, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×