search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை சட்டசபையில் என்.ஆர்.காங்கிரஸ் வெளிநடப்பு
    X

    புதுவை சட்டசபையில் என்.ஆர்.காங்கிரஸ் வெளிநடப்பு

    புதுவை சட்டசபையில் பேச அனுமதிக்காததை கண்டித்து ரங்கசாமி தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை இன்று காலை 10.30 மணிக்கு கூடியது. சபாநாயகர் வைத்திலிங்கம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கினார்.

    இதையடுத்து மதிப்பு கூட்டு வரி சட்டம் குறித்த அறிவிக்கையை முதல்-அமைச்சர் நாராயணசாமி வாசிக்க தொடங்கினார்.

    அப்போது ரங்கசாமி தலையில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஒட்டுமொத்தமாக எழுந்தனர். எதிர்க்கட்சித்தலைவர் ரங்கசாமி பேசினார்.


    அவர் பேசும்போது, அரசு அறிவித்த எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. நீட் தேர்வு தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதுதொடர்பாக சட்டமன்றத்தில் பேச வேண்டும் என கூறினார். ஆனால் முதல்-அமைச்சர் தொடர்ந்து அறிவிக்கையை வாசித்தார். ரங்கசாமிக்கு பேச அனுமதி கொடுக்கவில்லை.

    பேச அனுமதிக்காததை கண்டித்து ரங்கசாமி தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
    Next Story
    ×