search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2 நாட்களுக்கு ஒரு முறை தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்ய தேர்தல் பார்வையாளர்கள் உத்தரவு
    X

    2 நாட்களுக்கு ஒரு முறை தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்ய தேர்தல் பார்வையாளர்கள் உத்தரவு

    2 நாட்களுக்கு ஒரு முறை தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று வேட்பாளர்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
    சென்னை:

    2 நாட்களுக்கு ஒரு முறை தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என்று வேட்பாளர்களுக்கு தேர்தல் பார்வையாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள், பதிவு பெற்ற கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 62 பேருடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டத்துக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட தண்டையார் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நேற்று மாலை இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் தேர்தல் பொது பார்வையாளர் பிரவீண் பிரகாஷ், செலவின பார்வையாளர் அபர்ணா வில்லூரி, காவல் பார்வையாளர் ஷிவ் குமார் வர்மா, தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீண் நாயர் ஆகியோர் கலந்து கொண்டு வேட்பாளர்கள் தேர்தலில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கி கூறினர்.

    தேர்தல் பார்வையாளர்கள் வழங்கிய அறிவுரைகள் குறித்து கூட்டத்தில் பங்கேற்ற சுயேச்சை வேட்பாளர் அ.கணேசன் கூறியதாவது:-

    தேர்தல் கமிஷனின் விதிமுறைகளை முறையாக பின்பற்றி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். பணப்பட்டுவாடா நடக்கிறதா? என்பதை நீங்களும் கண்காணித்து எங்களுக்கு தகவல் அளிக்கலாம்.

    தேர்தல் பிரசாரத்துக்கு தேவையான அனைத்து பாதுகாப்பும் வழங்கப்படும். தேர்தல் செலவின கணக்குகளை 2 நாட்களுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அமைதியான பூங்காவான தமிழகத்தில் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற நீங்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

    இவ்வாறு தேர்தல் பார்வையாளர்கள் பேசியதாக அவர் கூறினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில், வேட்பாளர்கள் அனைவருக்கும் தேர்தல் கமிஷன் அடையாள அட்டை வழங்கப்பட்டது. 
    Next Story
    ×