search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
    X

    10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

    10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி எச்சரிக்கை விடுத்தார்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று வதந்தி பரவி உள்ளது. இதனால் வியாபாரிகள், பொது மக்கள் 10 ரூபாய் நாணயத்தை வாங்க தயங்குகிறார்கள். அனைத்து பத்து ரூபாய் நாணயங்களும் செல்லும் என்று ரிசர்வ் வங்கி பலமுறை தெளிவான அறிவிப்பு வெளியிட்டும் இன்னும் பல இடங்களில் அதனை வாங்க மறுத்து வருகிறார்கள். இதன் காரணமாக ரூ.10 நாணயங்களை சேமித்து வைத்திருப்பவர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.

    இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ரிசர்வ் வங்கியின் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளவாறு திருவள்ளூர் மாவட்டத்தில் பத்து ரூபாய் நாணயங்களை வணிக நிறுவனங்கள், ஆட்டோ, பேருந்து, சந்தைகள் ஆகிய இடங்களில் பத்து ரூபாய் நாணயங்களை வாங்கி கொள்ள தடையேதுமில்லை. இதனை வாங்க மறுப்பவர்கள் தொடர்பான புகார்களை மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற எண் மூலமாக புகார்களை அளிக்கலாம். புகார் அளிப்பவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளப்படும்.
    Next Story
    ×