search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகர் தேர்தல், விவசாயிகள் பிரச்சினை: வாட்ஸ்அப்பில் கேலி - கிண்டல்
    X

    ஆர்.கே.நகர் தேர்தல், விவசாயிகள் பிரச்சினை: வாட்ஸ்அப்பில் கேலி - கிண்டல்

    ஆர்.கே.நகர் இடைத் தேர்தல், விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் தொடர்பாக ‘வாட்ஸ்-அப்’, ‘பேஸ்புக்‘ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் காமெடி, கிண்டல்கள் தினமும் அரங்கேறுகின்றன. அவற்றை காணலாம்.
    * இளைஞர்களே பிரதமருக்கும், முதல்வருக்கும்தான் விவசாயிகள் மீது அக்கறை இல்லாமல் போய்விட்டது... உங்களுக்குமா?

    உங்களின் ஆதரவு இன்றி விவசாயிகள் போராட்டத்துக்கும், வடகாடு மக்கள் போராட்டத்துக்கும் ஒரு தீர்வு கிடைக்காது.

    * உத்தரபிரதேசத்தில் பதவி ஏற்ற உடனே அனைத்து விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். -மோடி

    தமிழ்நாட்டுல 200-க்கும் மேல் விவசாயிகள் செத்துக் கிடக்கிறார்கள். அவங்க கடனை தள்ளுபடி பண்ண முடியல. உங்க அரசியலுக்காக உ.பி.யில தள்ளுபடி பண்றீங்க...

    * விறகடுப்புல அரிசி பொங்கிட்டு இருந்தவரை சிலிண்டருக்கு மாற சொல்லிட்டு... சிலிண்டர் வச்சிருந்தா அரிசி கிடையாதுன்னு சொல்லுகிற தேசமிது...

    * ஆர்.கே.நகர்ல இருக்கிற வாக்காளர்களை எல்லாம் ஏதாவது ரிசாட்டுல தங்க வச்சிட்டு தேர்தல் அன்றைக்கு கூட்டிட்டு வருவோமா?

    அத்தனை பேரையும் தங்க வைக்க அவ்ளோ பெரிய ரிசாட்டுக்கு நான் எங்க போறது...

    * ஓட்டு போட்டு ஜெயிக்க வைக்கிறோம். விவசாயிகள் பிரச்சினை, மீனவர் பிரச்சினையை எல்லாம் முடிவுக்கு கொண்டு வருவீர்களா? - ஆர்.கே.நகர் தொகுதி மக்கள்.

    * ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் நடத்திய கருத்துக் கணிப்பில் பா.ஜனதா முந்துகிறது.

    * இரட்டை விளக்கில் ஒன்று எம்.ஜி.ஆர்... மற்றொன்று ஜெயலலிதா. - ஓ.பி.எஸ்.

    எந்த சின்னம் கொடுத்தாலும் சிக்சர் அடிச்சு சிதறடிப்போம்யா நாங்க...

    * ஆர்.கே.நகர் தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை -ரஜினி

    நாங்கதான் ஆதரவு கேட்கவே இல்லையே. அப்புறம் எதுக்கு இதுமாதிரி அறிவிப்பெல்லாம் விடுறாரு...

    * ஓட்டு கேட்டு வந்திருக்கேன் -கங்கைஅமரன்

    பாட்டு வேணுன்னா பாடிட்டு போங்க -மக்கள்

    * ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் என்தேசம் என் உரிமை கட்சி வேட்பாளரின் வேட்பு மனு நிராகரிப்பு.

    எப்போ எங்களை (இளைஞர்கள்) எதிர்த்து ஜெயிக்க முடியாதுன்னு சப்ப காரணத்தை காட்டி வேட்பு மனுவை நிராகரிக்க வச்சீங்களோ... அப்பவே நாங்க ஒரு அரசியல்வாதியா ஜெயிச்சிட்டோம்.

    * ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் வெற்றி பெற மதுரையில் ஓ.பி.எஸ். அணியினர் வியூகம்.

    -மதுரை எங்க இருக்கு... ஆர்.கே. நகர் எங்க இருக்கு...

    * ஆர்.கே.நகர் தேர்தல் ரிசல்ட் வரட்டும். அப்புறம் அ.தி.மு.க.வுக்கே நான்தான் தலைவி. அடித்து சொல்கிறார் தீபா...

    -எந்த அ.தி.மு.க.ன்னு தெளிவா சொல்லுங்க மேடம்...

    * எம்.ஜி.ஆர். தொப்பியை கேட்டால் ஜெய்சங்கர் தொப்பியை கொடுத்து ஏமாத்திட்டாங்களே...
    Next Story
    ×