search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சைதாப்பேட்டையில் நடந்த தி.மு.க. வேலை வாய்ப்பு முகாமில் 1065 மாணவர்கள் தேர்வு
    X

    சைதாப்பேட்டையில் நடந்த தி.மு.க. வேலை வாய்ப்பு முகாமில் 1065 மாணவர்கள் தேர்வு

    சைதாப்பேட்டையில் நடந்த தி.மு.க. வேலை வாய்ப்பு முகாமில் 1065 மாணவ-மாணவியர் தேர்வு செய்யப்பட்டார்கள்.
    சென்னை:

    தி.மு.க. பொறியாளர் அணி மாநில துணை செயலாளர் சி.பிரதீப் ஏற்பாட் டில் மார்ச்-1 தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி இலவச வேலை வாய்ப்பு முகாம் சைதாபேட்டை அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் நடைபெற்றது,

    மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ., சிறப்பு அழைப்பாளர் மாநில இளைஞர் அணி துணை செயலாளார் அன்பில் மகேஷ்எம்.எல்.ஏ., மற்றும் மாநில பொறியாளர் அணி செயலாளர் துரை. ஏ.சரவணன்எம்.எல்.ஏ., அரவிந்த ரமேஷ் எம்.எல்.ஏ., பாலவாக்கம் விசுவநாதன் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தனர்.

    பகுதி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாநில பொறியாளர் அணி துணை செயலாளர்கள் நரேந்திரன், உமாகாந்த் மற்றும் வீனஸ் குருப்ஸ் மற்றும் கலாம்2020.நெட் இயக்குனர் சீனிவாசன், சென்னை கிழக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை செயலாளர் அருண் முன்னிலை வகித்தனர் மற்றும் பகுதி செயலாளர் மதியழகன், வேளச்சேரி பாஸ்கரன்,மாவட்ட,பகுதி பொறியாளர் நிர்வாகிகள், வட்ட செயலாளர் மோகன் மற்றும் சென்னை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    முகாமில் பல பன்நாட்டு நிறுவனங்கள் கலந்து கொண்டன. மாணவ, மாணவியர் தனித்தனியாக வரவழைத்து நேர்காணல் நடத்தப்பட்டது. மொத்தம் 1455 மாணவ-மாணவியர் நேர்காணலில் பங்கேற்றனர், அதில் 1065 மாணவ-மாணவியர் தேர்வு செய்யப்பட்டார்கள்.

    தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவியர்க்கு தேர்வு சான்றிதழ் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விரைவில் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×