search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீனவர் பிரச்சினையில் நிரந்தர தீர்வு ஏற்பட கச்சத்தீவை மீட்க வேண்டும்: வெள்ளையன் பேச்சு
    X

    மீனவர் பிரச்சினையில் நிரந்தர தீர்வு ஏற்பட கச்சத்தீவை மீட்க வேண்டும்: வெள்ளையன் பேச்சு

    மீனவர் பிரச்சினையில் நிரந்தர தீர்வு ஏற்பட கச்சத்தீவை மீட்க வேண்டும் வெள்ளையன் பேச்சு

    நாகப்பட்டினம்:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் நாகை தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நாகையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் முருகையன், மாநில துணை தலைவர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராமஜெயம் வரவேற்றார்.

    கூட்டத்தில் வணிகர் சங்கங்களின் மாநில தலைவர் வெள்ளையன் கலந்து கொண்டு பேசினார்.

    34-வது வணிகர் தினவிழா மாநில மாநாடு சென்னை தீவு திடலில் வருகிற மே மாதம் 5-ந்தேதி நடக்கிறது. அதில் நாகை மாவட்டத்தில் இருந்து திரளான வணிகர்கள் கலந்து கொள்ள வேண்டும்.

    தமிழகத்தில் விவசாயம் பாதுகாக்கப்பட வேண்டும். விவசாயம் நமது பாரம்பரிய வணிகத்தோடு தொடர்புடையது. ஆன்லைன் வர்த்தகத்தால் நமது பாரம்பரிய வணிகம் பாதிக்கப்படுகிறது. எனவே வெளிநாட்டு பொருட்களை வணிகர்கள் விற்பனை செய்யக்கூடாது.

    ஆன்லைன் வணிகத்தால் சில்லறை வணிகம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. சில்லறை வணிகம், விவசாயம் ஆகியவை காக்கப்பட வேண்டும்.


    இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவது கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் பிரச்சினையில் நிரந்தர தீர்வு ஏற்பட கச்சதீவை மீட்க வேண்டும். கடல் எல்லையை மீனவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் எல்லையில் மிதவைகள் அமைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் தேவராஜ், மாநில பொருளாளர் ரத்தினம், மாவட்ட துணை தலைவர் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் பால்சாமி நன்றி கூறினார்.

    Next Story
    ×