search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் 3-ந்தேதி ஆர்ப்பாட்டம்: திருநாவுக்கரசர்
    X

    மத்திய, மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் 3-ந்தேதி ஆர்ப்பாட்டம்: திருநாவுக்கரசர்

    மத்திய மாநில அரசுகளை கண்டித்து வருகிற 3-ந்தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய பா.ஜ.க. அரசிடம் கடந்த 2015 டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, வார்தா புயல் பாதிப்பு, வறட்சி போன்ற காரணங்களுக்காக பிரதமரை நேரில் சந்தித்து தமிழக முதல்-அமைச்சர் கேட்டது ரூ.88 ஆயிரத்து 50 கோடி. ஆனால் தமிழக அரசுக்கு ஏற்கனவே வழங்கியது ரூ.1,940 கோடி. தற்போது மத்திய அரசு வழங்கியுள்ளது ரூ.2 ஆயிரத்து 15 கோடி மட்டுமே. இதைவிட தமிழர் விரோத போக்கு வேறு எதுவும் இருக்க முடியாது.

    இதுகுறித்து கடும் கண்டனத்தை அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் தெரிவிக்க தயங்குவதில் உள்ள ரகசியத்தை நம்மாலே புரிந்து கொள்ள முடியவில்லை. மத்திய மோடி அரசின் வஞ்சகப்போக்கை கண்டிப்பதுடன், இதை எதிர்த்து உரிமைக்குரல் எழுப்ப அஞ்சுகிற அ.தி.மு.க. ஆட்சியாளர்களுக்கு எதிராக கண்டனக்குரல் எழுப்புவது மிக அவசியம் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கருதுகிறது.



    இந்தசூழலில் மத்திய-மாநில அரசுகளின் தமிழக மக்களின் நலனுக்கு எதிரான போக்கை கண்டிக்கிற வகையிலும், தமிழகத்திற்கு கூடுதல் நிதி வழங்க வலியுறுத்தியும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக, தமிழகத்திலுள்ள 234 சட்டமன்றத்தொகுதிகளிலும் ஏதாவது ஒரு இடத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வருகிற (ஏப்ரல்) 3-ந் தேதி காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×