search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் காசநோயால் பாதிக்கப்பட்ட 1545 பேருக்கு சிகிச்சை: கலெக்டர் தகவல்
    X

    ராமநாதபுரம் மாவட்டத்தில் காசநோயால் பாதிக்கப்பட்ட 1545 பேருக்கு சிகிச்சை: கலெக்டர் தகவல்

    ராமநாதபுரத்தில் காச நோயால் பாதிக்கப்பட்ட 1545 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கலெக்டர் தெரிவித்தார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட பொது சுகாதாரத்துறை சார்பாக திருத்தி அமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் உலக காசநோய் தின விழா ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் நடராஜன் தலைமை தாங்கினார். விழாவில் அவர் பேசியதாவது:-

    மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சியின் காரணமாக காசநோய் தடுப்பிற்கான புதிய மருந்துகளும், மருத்துவ முறைகளும் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளன. 6 மாதம் முதல் 8 மாதம் வரை தொடர்ந்து சிகிச்சை எடுப்பதன் மூலம் காசநோயினை முற்றிலுமாக குணப்படுத்த முடியும்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 62 மையங்களில் காசநோய் பரிசோதனை மற்றும் தொடர் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. 2016-ஆம் ஆண்டில் மாவட்டத்தில் மொத்தம் 17,042 நபர்களுக்கு காசநோய் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு 1,545 நபர்களுக்கு காச நோய் இருப்பதாக கண்ட றியப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 2015-ஆம்ஆண்டில் 1,607 நபர்கள் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களாக பதிவு செய்யப்பட்டு 1,443 நபர்கள் தொடர் சிகிச்சை பெற்று பூரணமாக குண மடைந்துள்ளனர்.

    காசநோயின் பாதிப்பு மற்றும் காசநோய் தடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி ராமநாதபுரம் மாவட்டத்தை 100 சதவீதம் காசநோய் பாதிப்பில்லாத மாவட்டமாக ஏற்படுத்திடும் வகையில் மருத்துவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    2016-வது ஆண்டில் திருத்தி அமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை கலெக்டர் வழங்கினார்.

    Next Story
    ×