search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின் விளக்குகளை ஒரு மணி நேரம் அணைத்து பூமி நேரம் அனுசரிப்பு
    X

    மின் விளக்குகளை ஒரு மணி நேரம் அணைத்து பூமி நேரம் அனுசரிப்பு

    சென்னை உள்ளிட்ட உலகின் பல்வேறு நகரங்களில் முக்கிய பகுதிகளில் இன்று இரவு ஒரு மணி நேரம் மின் விளக்குகளை அணைத்து பூமி நேரம் அனுசரிக்கப்பட்டது.
    சென்னை:

    பூமியில் தட்பவெப்ப மாற்றத்தின் விளைவை மக்களுக்கு உணர்த்தும் வகையில், தட்பவெப்ப நிலை மாற்றத்தை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக உலகம் முழுவதும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமை இரவு பூமி நேரம் அனுசரிக்கப்படுகிறது. உலக இயற்கை நிதியம் சார்பில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சியின்போது, அத்தியாவசியமான மின் விளக்குகள் தவிர மற்ற அனைத்து விளக்குகளையும் அணைக்கப்படும். இதனால் மின் ஆற்றல் சேமிக்கப்படுவதுடன், ஒளிசார் மாசடைதலும் குறைய வழி வகுக்கும்.

    இவ்வகையில் 10-வது பூமி நேரம் இன்று (மார்ச் 25) அனுசரிக்கப்பட்டது. உலகம் முழுவதும் 172 நாடுகளில் உள்ள சுமார் 7000 நகரங்கள் இதில் பங்குபெற்றன. இரவு இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரையிலான ஒரு மணி நேரம் அத்தியாவசியமானதை தவிர்த்து மற்ற மின் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன.

    ஆஸ்திரேலியாவின் சிட்னி ஓபரா ஹவுஸ், ஹார்பர் பாலம், லூனா பார்க், சிட்னி டவர் ஐ உள்ளிட்ட முக்கியமான கட்டிடங்களில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டன. மக்கள் கூடும் முக்கிய பகுதிகளில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    சென்னையில் பெசன்ட் நகர் கடற்கரையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×