search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சின்னம் முடக்கப்பட்டதின் பின்னணியில் பா.ஜ.க. இருக்கிறதா? - அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் சந்தேகம்
    X

    சின்னம் முடக்கப்பட்டதின் பின்னணியில் பா.ஜ.க. இருக்கிறதா? - அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் சந்தேகம்

    அ.தி.மு.க-வின் அதிகார்வப்பூர்வமான இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்க்கப்பட்டதின் பின்னணியில் பா.ஜ.க இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க-வின் அதிகார்வப்பூர்வமான இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்க்கப்பட்டதின் பின்னணியில் பா.ஜ.க இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.

    ஜெயலலிதா மரணத்தைத் தொடர்ந்து சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என அ.தி.மு.க. இரண்டாக பிளவுபட்டுள்ளது.
    ஆட்சியையும், கட்சியையும் கைப்பற்ற இரு அணிகளுக்கும் இடையே பலத்த போட்டி ஏற்பட்டது. அதன்பின்னர் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே தர வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் மனு கொடுத்தனர். இதனால் இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்ற பரபரப்பு ஏற்பட்டது.

    இந்நிலையில், அக்கட்சியின் அதிகாரப்பூர்வமான சின்னமான இரட்டை இலையை தற்காலிகமாக முடக்கி வைத்து தேர்தல் ஆணையம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்திருப்பதாவது:-

    தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. கட்சியின் 90 சதவிகித உறுப்பினர்கள் எங்கள் பக்கம் இருக்கும் நிலையை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளாதது ஏமாற்றம் அளிக்கிறது. எங்களது தரப்பு ஆவணங்களை முறையாக சமர்பித்தோம், இருப்பினும் சின்னம் முடக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் முடிவு குறித்து நீதிமன்றத்தில் முறையிடுவது குறித்து ஆலோசித்து வருகின்றோம்.

    சில நாட்களுக்கு முன்னதாகவே பா.ஜ.க. தலைவர்கள் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என கூறிவந்த நிலையில், தற்போது சின்னம் முடக்கப்பட்டதின் பின்னணியில் பா.ஜ.க உள்ளதா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதம் 17-ம் தேதி இவ்விவகாரம் குறித்து ஆஜராகுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது, அன்று எங்களது தரப்பு வாதங்களை சரியாக அளித்து சின்னத்தை மீட்டெடுப்போம்

    இவ்வாறு தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×