search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகர் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் பறிமுதல்: 17 பேர் கைது
    X

    விருதுநகர் மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் பறிமுதல்: 17 பேர் கைது

    மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    ராஜபாளையத்தில் டி.எஸ்.பி. சங்கரேஸ்வரன் வழிகாட்டுதலின்படி தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ஏசுதாஸ், சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், விஜி மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    புகையிலை பொருட்கள் விற்றதாக இ.எஸ்.ஐ. காலனி மாரியம்மன் கோவில் அருகே மகாலிங்கம் (வயது49), எஸ்.ராமலிங்காபுரத்தில் பேச்சிமணி (52), சங்கரபாண்டியாபுரம் மெயின்ரோட்டில் பாக்கிய நாதன் (43) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    சேத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் பாலகணேசன் நடத்திய அதிரடி சோதனையில் புகையிலை பொருட்கள் விற்றதாக தேவதானம் காளியம்மன் கோவில் அருகில் பெட்டிக்கடை வைத்திருந்த முத்துராமலிங்கம் (47) என்பவரை கைது செய்தார். சேத்தூர் புறக்காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மரியபாக்கியம் நடத்திய சோதனையில் சோலைச் சேரி அம்மன் நகர் பகுதியில் குலமணி என்பவர் கைது செய்யப்பட்டார்.

    தளவாய்புரம் சப்-இன்ஸ்பெக்டர் பாலாஜி சோதனை நடத்தி புகையிலை பொருட்கள் விற்றதாக அய்யர் என்பவரை கைது செய்தார்.

    மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

    Next Story
    ×