search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்
    X

    கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்

    கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் முதல் அணுஉலையில் உள்ள ரியாக்டரில் பராமரிப்பு செய்வதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.
    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மொத்தம் 2 அணு உலைகள் உள்ளன. இதில் தலா 200 மெகாவாட் வீதம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் 75 சதவீத மின்சாரம் தமிழக தேவைக்காக வழங்கப்படுகிறது.

    முதல் அணுஉலையில் உள்ள ரியாக்டரின் ஆயுட் காலம் 25 ஆண்டுகள் மட்டுமே. இருப்பினும் அதனை புதுப்பித்து கடந்த 35 ஆண்டுகளாக பராமரித்து இயக்கி வருகிறார்கள்.

    இந்த நிலையில் ரியாக்டரை மீண்டும் பராமரிப்பு செய்து கூடுதலாக இயக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஆய்வு பணி தொடங்கப்பட்டு உள்ளது.

    இதையடுத்து முதல் அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. 2-வது அணுஉலையில் மட்டும் 200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
    Next Story
    ×