search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடும்ப உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஏற்ப ரே‌ஷன் சர்க்கரை ½ கிலோ குறைப்பு
    X

    குடும்ப உறுப்பினர் எண்ணிக்கைக்கு ஏற்ப ரே‌ஷன் சர்க்கரை ½ கிலோ குறைப்பு

    ரேஷன் கடைகளில் அரிசி வாங்காத சர்க்கரை கார்டுதாரர்களுக்கு இப்போது யூனிட் அடிப்படையில் சர்க்கரை அளவு ½ கிலோ வரை குறைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    பொதுமக்களுக்கு ரேசன் கடைகளில் 20 கிலோ அரிசி இலவசமாக கொடுப்பது வழக்கம்.

    ஆனால் இப்போது 20 கிலோ அரிசி மொத்தமாக கொடுப்பது இல்லை. 5 கிலோ அரிசியை குறைத்து விட்டு அதற்கு பதிலாக கோதுமை கொடுக்கிறார்கள்.

    ஆதார் பதிவு அடிப்படையில் ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை பேர் உள்ளனர் என்ற விவரம் ரே‌ஷன் கடைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அந்த எண்ணிக்கை அடிப்படையிலேயே இப்போது பொருட்கள் வழங்கப்படுகிறது.

    அதன்படி ஒரு நபருக்கு 5 கிலோ அரிசி வீதம் கணக்கிட்டு வழங்க வேண்டும். குழந்தையாக இருந்தால் 2 கிலோ அரிசி கணக்கிட்டு கொடுக்க வேண்டும்.

    4 பேர் உள்ள குடும்பத்துக்கு 20 கிலோ அரிசி, 6 பேர் உள்ள குடும்பத்துக்கு 30 கிலோ அரிசி கொடுக்க வேண்டும்.

    ரேசன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் போதிய கையிருப்பு இல்லாததால் எந்த பொருளையும் முழுமையாக கொடுப்பதில்லை.

    20 கிலோ அரிசியை மொத்தமாக கொடுக்காமல் 10 கிலோ அரிசி கொடுக்கிறார்கள். அதிலும் 5 கிலோவை கோதுமையாக கொடுக்கிறார்கள். 20 கிலோவுக்கு அதிகமாக இப்போது அரிசி, கோதுமை கொடுப்பதில்லை.

    ஆனால் அரிசி வாங்காத சர்க்கரை கார்டுதாரர்களுக்கு இப்போது யூனிட் அடிப்படையில் சர்க்கரை அளவை ½ கிலோ குறைத்து விட்டனர்.

    3 பேர் கொண்ட குடும்பத்துக்கு இதற்கு முன்பு 5 கிலோ சர்க்கரை வழங்கப்பட்டு வந்தது. இந்த மாதம் முதல் 4½ கிலோதான் சர்க்கரை வழங்குகிறார்கள்.


    இதுபற்றி ஒரு ரேசன் கடைக்காரரிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    அரிசியை பொறுத்தவரை குடும்பத்தில் 1 ஆளுக்கு 5 கிலோ வீதம் கணக்கிட்டு அரிசி கொடுக்க வேண்டும். ஆனால் 20 கிலோவுக்கு மேல் சென்றால் எங்களிடம் கொடுக்க போதிய அளவு அரிசி கையிருப்பு கிடையாது. அதனால் 20 கிலோவுக்குள்தான் கொடுக்கிறோம்.

    சர்க்கரை கார்டுதாரர்களுக்கு 3 கிலோ கணக்கிட்டு அதற்கு மேல் தலைக்கு ½ கிலோ வீதம் கணக்கிட்டு கொடுக்கிறோம்.

    கடைக்கு பொருட்கள் வருவது பற்றாக்குறையாக இருப்பதால் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக இப்போது பொருட்களை குறைத்துதான் கொடுக்கிறோம் என்றார்.

    Next Story
    ×