search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.கே.நகர் தேர்தலுக்கு 1,200 வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார்
    X

    ஆர்.கே.நகர் தேர்தலுக்கு 1,200 வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார்

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்காக 1,200 வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.
    சென்னை:

    ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந்தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை கண்காணிக்க பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

    இந்தநிலையில் இடைத்தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு எந்திரங்கள் புளியந்தோப்பு டிக்காசா ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளியில் தயார் நிலையில் உள்ளன.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-



    தேர்தலுக்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. புளியந்தோப்பு டிக்காசா ரோட்டில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 350 கட்டுப்பாட்டு எந்திரங்களும், 1,200 வாக்குப்பதிவு எந்திரங்களும் உள்ளன.

    நாளை (திங்கட்கிழமை) அல்லது நாளை மறுதினம் (21-ந்தேதி) டெல்லியில் இருந்து தேர்தல் அதிகாரிகள் வந்து வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்த்து சான்றிதழ் வழங்குவார்கள்.

    அதைத்தொடர்ந்து நாங்கள் வாக்குப்பதிவு எந்திரங்களை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்க இருக்கிறோம். ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுப்பதற்காக கண்காணித்து வருகிறோம். 3 பறக்கும் படை, 3 நிலையான கண்காணிப்பு குழு, 2 வீடியோ கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுக்கள் 24 மணி நேரமும் ஆர்.கே.நகர் தொகுதியில் கண்காணித்து வருகிறது.

    வாக்களிப்பதின் அவசியம் குறித்து தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. வருகிற வாரத்தில் அதற்கான நிகழ்ச்சிகள் ஆர்.கே.நகர் தொகுதியில் நடத்த இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×