search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் ஆன்-லைன் மூலம் விபசாரம்: 5 பெண்கள் உள்பட 6 பேர் கைது
    X

    புதுவையில் ஆன்-லைன் மூலம் விபசாரம்: 5 பெண்கள் உள்பட 6 பேர் கைது

    புதுவையில் ஆன்-லைன் மூலம் விபசாரத்தில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
    புதுச்சேரி:

    ஆன்-லைன் மூலம் விபசாரம் நடைபெறும் சம்பவங்கள் சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் மட்டுமே நடந்து வந்தன. நாளடைவில் இந்த கலாச்சாரம் புதுவையிலும் பரவியது.

    இதற்காக ஒரு கூட்டம் பண ஆசை காட்டி இளம் பெண்களை தங்கள் வலைக்குள் சிக்க வைத்து அவர்கள் மூலம் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள். வெளி மாநிலங்களில் இருந்து ஆண்களை கவரும் அழகிகளை வரவழைத்து மக்கள் அதிக நடமாட்டம் இல்லாத இடங்களில் வீடு வாடகைக்கு எடுத்து தங்க வைக்கின்றனர்.

    பின்னர் வாடிக்கையாளர்களுக்கு ஆன்-லைன் மூலம் புக்கிங் செய்து இளம் பெண்களை விபசாரத்தில் ஈடுபட வைக்கின்றனர். ஆன்-லைனில் அழகிகளின் படங்களை காண்பித்து ஒவ்வொரு அழகிக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்து பேரம் பேசுகின்றனர்.

    அதற்கு சம்மதிக்கும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் குறிப்பிட்டு சொல்லும் இடத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள். இது குறித்து புதுவை போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்ததால் இந்த கும்பலை கையும், களவுமாக பிடிக்க சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன் நடவடிக்கை மேற்கொண்டார்.

    அதற்காக ஒரு தனி படையும் அமைத்தார். அந்த தனிபடையினர் விபசார கும்பலை பிடிக்க தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் ஒரு குறிப்பிட்ட இணைய தளத்தில் சகல வசதிகளுடன் புதுவையில் விபசாரத்தில் ஈடுபடலாம் என்றும், அதில் 20 செல்போன் எண்கள் பதிவு செய்யப்பட்டு இருந்தன. இதையடுத்து அதிரடிப்படை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் தலைமையிலான போலீசார் அந்த செல்போன் எண்களில் ஒன்றில் தொடர்பு கொண்டனர்.

    அப்போது எதிர்முனையில் ஒரு ஆண் பேசினார். அவரிடம் போலீசார் எங்களுக்கு அழகிகள் தேவை என்று கூறினர். அதற்கு அவர் ஒரு அழகிக்கு ரூ.10 ஆயிரம் என்று கூறினார். அதற்கு போலீசார் சம்மதித்தனர்.

    அந்த புரோக்கர், ராஜீவ்காந்தி சிலை அருகே நிற்பதாகவும், அங்கு வாருங்கள் என்றும், பின்னர் நான் அங்கிருந்து அழைத்து செல்கிறேன் என்று கூறினார்.

    இதையடுத்து சாதாரண உடையில் அதிரடிப்படை போலீசார் அங்கு சென்றனர். அப்போது அந்த நபர் ஒரு கை பையுடன் நின்றிருந்தார். அவரிடம் போலீசார் பேசினர். நெல்லித்தோப்பு பீட்டர் நகரில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்து சென்றார்.

    இதற்கிடையில் இந்த தகவலை உருளையன்பேட்டை போலீசாருக்கு தனிப்படையினர் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் தனசெல்வன், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அங்கு 4 அழகிகள், ஒரு பெண் உள்பட 5 பேர் இருந்தனர்.

    அதன்பிறகுதான், அழைத்து வந்தவர்கள் போலீசார் என்பது புரோக்கருக்கு தெரிந்தது. உடனே அவர் தப்பிச்செல்ல முயன்றார். உடனே போலீசார் அவரையும் 4 அழகிகள் உள்பட 5 பெண்களையும் மடக்கி பிடித்தனர்.

    மேலும் அவர்கள் அனை வரையும் போலீசார் ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் புரோக் கராக செயல்பட்டவர் வேல் ராம்பேட்டை சேர்ந்த பார்த்திபன் (வயது 42), பீட்டர் நகரை சேர்ந்த ஸ்ரீமதி (48) என்பது தெரிய வந்தது.

    மேலும் கேரளா, பெங்களூர், புதுவை சோலை நகர் ஆகிய இடங்களில் இருந்து 4 இளம் பெண்களை பண ஆசை காட்டி கடத்தி வந்து விபசாரத்தில் ஈடு படுத்தியது தெரிய வந்தது.

    அவர்களிடம் இருந்து 16 செல்போன், ஒரு லேப்-டாப், 2 மோட்டார் சைக்கிள் மற்றும் ரூ.14 ஆயிரம் ரொக்கம் கைப் பற்றப்பட்டது. பார்த்திபன், ஸ்ரீமதி ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    விபசாரத்தில் ஈடுபடுத் தப்பட்ட 4 அழகிகளும் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×