search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரட்டை இலை சின்னம் யாருக்கு? - இரு அணிகளையும் விசாரணைக்கு அழைத்தது தேர்தல் ஆணையம்
    X

    இரட்டை இலை சின்னம் யாருக்கு? - இரு அணிகளையும் விசாரணைக்கு அழைத்தது தேர்தல் ஆணையம்

    இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை, இரு அணிகளிடமும் 22-ம் தேதி விசாரணை நடத்தி முடிவு செய்யப்படும் என, தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
    புது டெல்லி:

    அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது, இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியினர் தலைமை தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தனர். இதனையடுத்து சசிகலா நியமனம் தொடர்பாக மார்ச் 20-ம் தேதிக்குள் முடிவெடுக்க உள்ளதாக தேர்தல் ஆணையமும் அறிவித்தது.

    அதேசமயம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும்படி ஓபிஎஸ் அணி வலியுறுத்தியுள்ளது. ஓ.பி.எஸ். அணி சார்பில் போட்டியிடும் மதுசூதனனுக்கு வழங்குமாறு தேர்தல் ஆணையத்திடம் மனோஜ் பாண்டியன் இன்று மனு ஒன்றை அளித்துள்ளார்.



    இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது 22-ம் தேதி முடிவு செய்யப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    வருகின்ற 22-ம் தேதி காலை 10.30 மணிக்கு டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் இரு அணிகளும் ஆஜராக வேண்டும்.விசாரணைக்குப்பின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது அன்றிரவே முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×