search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரமக்குடியில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    பரமக்குடியில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    பரமக்குடி 5 முனை அருகே பொன்னையாபுரம், பாலன்நகர் செல்லும் ரெயில்வே கேட் சுரங்க நடைபாதை பணியை உடனே தொடங்க கோரி தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    பரமக்குடி:

    பரமக்குடி 5 முனை அருகே பொன்னையாபுரம், பாலன்நகர் செல்லும் ரெயில்வே கேட் சுரங்க நடைபாதை பணியை உடனே தொடங்க கோரி தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் திசைவீரன், நகர் செயலாளர் சேது. கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் கருப்பையா, மாணவர் அணி நிர்வாகி துரைச்சாமி, நிர்வாகிகள் அருளாந்து, வக்கீல் பூமிநாதன், கீதம் ரமேஷ், கொட்டகுடி வளவன், ஜெயக்குமார், செல்வம், பெருமாள் கோவில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் சொக்கலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் மாவட்ட செயலாளர் திவாகரன் பேசியதாவது:-

    தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. ரேசன் கடையில் பொருட்கள் கிடைக்க வில்லை. கடுமையான குடிநீர் பஞ்சம் உள்ளது. இதற்கு தி.மு.க. ஆட்சி வந்தால் தான் தீர்வு கிடைக்கும். ஸ்டாலின் விரைவில் முதல்வர் ஆவார். ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

    காவல் துறையின் நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் உள்ளது. தி.மு.க.வினர் எதற்கும் பயந்தவர்கள் அல்ல. எதையும் சந்திக்கும் ஆற்றல் எங்களுக்கு உள்ளது. விரைவில் சுரங்க பாதை பணிகள் தொடங்கா விட்டால் மீண்டும் போராட்டம் வெடிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×