search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தாம்பரம் பகுதியில் குடோன்களாக மாற்றப்பட்ட 10 அரசு பள்ளி வகுப்பறைகள்
    X

    தாம்பரம் பகுதியில் குடோன்களாக மாற்றப்பட்ட 10 அரசு பள்ளி வகுப்பறைகள்

    தாம்பரத்தில் 10 அரசு பள்ளி வகுப்பறைகள் குடோன்களாக மாற்றப்படுவது பொதுமக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.
    சென்னை:

    தாம்பரம் அடுத்துள்ள சேலையூர் அரசு பள்ளியில் சில வகுப்பறைகளில் அரசின் விலையில்லா மிக்சி, கிரைண்டர் போன்ற பொருட்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. மாணவ- மாணவிகள் வகுப்பறைகள் இல்லாமல் மரத்தடியில் அமர்ந்து படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அந்த பள்ளியின் ஒரு வகுப்பறையில் தீப்பிடித்து பொருட்கள் எரிந்தது. இன்னும் சில வகுப்பறைகளில் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

    பள்ளி வகுப்பறைகள் குடோன்களாக மாற்றப்படுவது பொதுமக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. இதுபற்றி காங்கிரஸ் மாவட்ட தலைவர் சிவராமன் கூறியதாவது:-

    சேலையூரைபோல் இந்த பகுதியில் 10-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பல வகுப்பறைகள் குடோன்களாக மாற்றப்பட்டுள்ளன. படிப்பதற்கு வகுப்பறைகள் இல்லாமல் மாணவ- மாணவிகள் திண்டாடுகின்றனர்.

    அரசு பள்ளிகளில் ஏழை மற்றும் நடத்தர வர்க்கத்து குழநதைகள்தான் படிக்கின்றன. அவர்களின் உயிரோடு விளையாடுகின்ற அரசின் செயல் கண்டனத்துக்குரியது.

    உடனடியாக பொருட்களை அப்புறப்படுத்தி மாணவர்கள் படிக்க ஏற்பாடு செய்யாவிட்டால் இலவச பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைகளின் பூட்டுகளை பொது மக்களுடன் சேர்ந்து உடைத்து பொருட்களை வெளியே தூக்கி வைப்போம்” என்றார்.
    Next Story
    ×