search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லித்தோப்பில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்: பெண் பலி
    X

    நெல்லித்தோப்பில் மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதல்: பெண் பலி

    நெல்லித்தோப்பில் இன்று காலை மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ் மோதியதில் பெண் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிந்தார்.

    புதுச்சேரி:

    புதுவை குயவர்பாளையம் ஆனந்தமுத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி கோவிந்தம்மாள் (வயது 42). இவர், அரியாங்குப்பத்தில் உள்ள தனியார் லெதர் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    இன்று காலை 9 மணியளவில் கோவிந்தம்மாள் வழக்கம் போல் வேலைக்கு செல்ல வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார்.

    நெல்லித்தோப்பு மணி மேகலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வேகத் தடையை கடந்து வந்த போது பின்னால் மரக்காணத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் நோக்கி வந்த தனியார் பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி கோவிந்தம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

    இதனை பார்த்ததும் பஸ்சை அதே இடத்தில் நிறுத்தி விட்டு டிரைவரும், கண்டக்டரும் தப்பி ஓடி விட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பஸ்சின் கண்ணாடியை அடித்து நொறுக்கினார்கள்.

    இதுபற்றி தகவல் அறிந்த தும் புதுவை போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர் காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பஸ் விபத்தில் பலியான கோவிந்தம்மாளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே நேற்று மாலை அரியூரில் தனியார் பஸ் மோதியதில் நர்சு இறந்து போனார். இது பற்றிய விவரம் வருமாறு:-

    மதகடிப்பட்டு கலிதீர்த்தாள் குப்பம் கோதண்டபாணி நகரை சேர்ந்தவர் துளசிராமன். தனியார் பள்ளி நிர்வாகி. இவரது மனைவி தாட்சாயிணி. (46). இவர், மடுகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணி புரிந்து வந்தார்.

    நேற்று மாலை துளசி ராமன் தனது மனைவி தாட்சாயிணியுடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அரியூர் தனியார் சர்க்கரை ஆலை அருகே வந்த போது, அந்த வழியாக வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தாட்சாயிணி உடல் நசுங்கி இறந்து போனார்.

    இதுகுறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×