search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு தேர்வுகள் தொடங்கின
    X

    சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு தேர்வுகள் தொடங்கின

    சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு தேர்வுகள் நேற்று தொடங்கின.
    சென்னை:

    சி.பி.எஸ்.இ. 10, 12-ம் வகுப்பு தேர்வுகள் நேற்று தொடங்கின.

    மத்திய கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 10, 12-ம் வகுப்பு தேர்வுகள் நேற்று தொடங்கின. இந்தியாவில் 10-ம் வகுப்பு தேர்வை 16 லட்சத்து 67 ஆயிரத்து 573 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர்.

    சென்னை மண்டலத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம், கோவா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள், டாமன் டையூ தீவுகள் ஆகியவை உள்ளன. இவற்றில் பெரும்பாலான மாநிலங்களில் 10-ம் வகுப்பு தேர்வு நேற்று தொடங்கியது.

    ஆனால் தமிழகத்தில் பல பள்ளிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) தான் தேர்வு தொடங்குகிறது. இன்று இந்தி தேர்வு நடக்கிறது. 15-ந்தேதி தெலுங்கு, பிரெஞ்சு உள்ளிட்ட தேர்வுகள் நடைபெற உள்ளன. அடுத்த மாதம் (ஏப்ரல்) 10-ந்தேதி தேர்வு முடிவடை கிறது.

    தமிழகத்தில் அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு நேற்று 12-ம் வகுப்பு தேர்வு தொடங்கியது. ஆங்கில தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை இந்தியா முழுவதும் 10 லட்சத்து 98 ஆயிரத்து 420 பேர் எழுதினார்கள். சென்னையில் தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள் ஆங்கில தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக தெரிவித்தனர்.

    பரதநாட்டியம், கதக், ஒடிசி உள்ளிட்ட தேர்வுகள் இன்று நடக்கின்றன. 15-ந்தேதி இயற்பியல், நர்சிங் உள்ளிட்ட தேர்வுகள் நடைபெறுகிறது. அடுத்த மாதம் 29-ந்தேதி தேர்வு நிறைவு பெறுகிறது. 
    Next Story
    ×