search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த 600 முரட்டுக்காளைகள்
    X

    திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டு சீறிப்பாய்ந்த 600 முரட்டுக்காளைகள்

    திண்டுக்கல் அருகே அய்யம்பாளையத்தில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 600 காளைகள் சீறிப்பாய்ந்தன.

    ஆத்தூர்:

    தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதால் பாரம்பரியமாக நடைபெறும் கிராமங்களில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் பெரியமுத்தாலம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு இன்று நடைபெற்றது.

    இதில் 600 காளைகள் தேனி, மதுரை, மேலூர், நத்தம், திண்டுக்கல், கொசவபட்டி, திருச்சி, கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பங்கேற்றன.

    220 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்து இருந்தனர். மாடுகள் மற்றும் வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு மஞ்சள்நிற பனியன் வழங்கப்பட்டது.

    வாடிவாசல் வழியாக கோவில் காளையை தொடர்ந்து காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக சீறிப்பாய்ந்தன. இதனை மாடுபிடி வீரர்கள் உற்சாகத்துடன் அடக்கினர். சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு பீரோ, கட்டில்,மெத்தை, சைக்கிள், அண்டா, தங்கம் மற்றும் வெள்ளி காசுகள் பரிசாக வழங்கப்பட்டது.

    பிடிபடாத மாட்டின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகளை கூடுதல் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் செய்திருந்தனர்.

    Next Story
    ×