search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விழுப்புரத்தில் டாஸ்மாக் கடை பெயர் பலகை மீது ஸ்டிக்கர் ஒட்டிய பா.ம.க. வினர்
    X

    விழுப்புரத்தில் டாஸ்மாக் கடை பெயர் பலகை மீது ஸ்டிக்கர் ஒட்டிய பா.ம.க. வினர்

    விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பா.ம.க. சார்பில் டாஸ்டாக் கடை பெயர் பலகை மீது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
    விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பா.ம.க. சார்பில் டாஸ்டாக் கடை பெயர் பலகை மீது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. விழுப்புரத்தில் சிக்னல் அருகே உள்ள டாஸ்மாக் கடை, காட்பாடி ரெயில்வே கேட் அருகே உள்ள டாஸ்மாக் கடை, காணையில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளின் பெயர் பலகை மீது பா.ம.க.வினர் ஸ்டிக்கர் ஒட்டினார்கள்.

    நிகழ்ச்சியில் பா.ம.க. மாநில துணை பொதுசெயலாளர் தங்க ஜோதி, மாநில வன்னியர் சங்க துணை தலைவர் அன்புமணி, மாவட்ட செயலாளர் புகழேந்தி, நகர தலைவர் பெருமாள், மாவட்ட துணை செயலாளர் மணிமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம் கிழக்கு ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. சார்பில் மாநில துணை பொதுசெயலாளர் வண்டிமேடு சிவக்குமார் தலைமையில் திண்டிவனம், கிளியனூர், பிரம்மதேசம்,மரக்காணம், செஞ்சி,வளத்தி,பனையடி ஆகிய பகுதிகளில் டாஸ்மாக் கடை பெயர் பலகை மீது ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.

    மாவட்ட செயலாளர்கள் சேது, முருகன்,மாவட்ட தலைவர் சங்கர், உட்பட பலர் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் 77 இடங்களில் டாஸ்மாக் கடைகளின் பெயர் பலகை மீது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

    Next Story
    ×