search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் வேலை வாங்கித்தருவதாக ரூ.11 ½ லட்சம் மோசடி: கட்டிட தொழிலாளி கைது
    X

    திருப்பூரில் வேலை வாங்கித்தருவதாக ரூ.11 ½ லட்சம் மோசடி: கட்டிட தொழிலாளி கைது

    திருப்பூரில் வேலை வாங்கித்தருவதாக ரூ.11 ½ லட்சம் மோசடி செய்த கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்தி நகர் ஏ.வி.பி. நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 53). கட்டிட மேஸ்திரி. இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவரும் பட்டப்படிப்பு முடித்து விட்டு வேலை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த சங்கர் (33) என்பவர் மேஸ்திரி முருகனிடம் சென்டரிங் வேலைக்கு சேர்ந்தார். மேஸ்திரி முருகனிடம் நட்பை ஏற்படுத்தி கொண்டு சங்கர் குடும்ப நண்பரானார்.

    இந்தநிலையில் மேஸ்திரியிடம் எனது மனைவிக்கு வங்கியில் வேலை கிடைத்து விட்டது. நான் ஊருக்கு செல்கிறேன் என்று கூறினார். இதுதவிர எனது மாமனாரும் தலைமை செயலகத்தில் வேலையில் இருக்கும் ஒருவரும் நண்பர்கள். அவர் எங்கு வேண்டுமானலும் வேலை வாங்கித்தருவார் என்று கூறிச்சென்றார்.

    பின்னர் ஒரு நாள் மேஸ்திரி முருகனுக்கு போன் செய்து எனக்கும் வேலை கிடைத்து விட்டது என்றும் நான் இனி வேலைக்கு வரமாட்டேன் என்றும் கூறினார்.

    சில நாட்கள் கழித்து சங்கர் திருப்பூருக்கு வந்தார். மேஸ்திரி முருகனின் வீட்டுக்கு வந்த சங்கர் உங்கள் மகன், மகளுக்கு வேலை தேடிக்கொண்டுள்ளீர்கள்.

    தற்போது மின்வாரியத்திலும், மாநகராட்சியிலும் வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள். எனது மாமனாரிடம் கூறினால் உங்கள் மகள், மகனுக்கு வேலை வாங்கித்தந்து விடுவார். அதற்கு கொஞ்சம் செலவாகும் என்று ஆசைவார்த்தை கூறி ரூ.50 ஆயிரம் வாங்கிச்சென்றார்.

    அதன்பின்னர் பல தவணையாக ரூ.11½ லட்சம் பணத்தை வாங்கினார். 1 வருடம் ஆகியும் சரியான பதிலும், வேலையும் கிடைக்க வில்லை. கடந்த சில வாரங்களாக சங்கரின் செல்போன் சுவிட்ச்- ஆப் செய்யப்பட்டிருந்தது.

    இதனால் அதிர்ச்சியடைந்த முருகன் திருப்பூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துமாலை வழக்குப்பதிவு செய்து மோசடி செய்த சங்கரை தேடி வந்தனர். அவரது சொந்த ஊரில் போலீசார் கைது செய்து திருப்பூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சங்கருக்கும், சங்கரின் மனைவிக்கு வேலை கிடைக்கவில்லை. கூலி வேலைக்குத்தான் செல்கிறார்கள். மாமனார் குறித்து தகவல்கள் பொய்யானவை என்பது தெரியவந்தது. மேலும் சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மோசடியில் ஈடுபட்டேன் என்று கூறினார். விசாரணையில் சங்கர் 2 கார், ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கியுள்ளதும் தெரியவந்தது. அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×