search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை காவல் துறையை நவீனமயமாக்க மத்திய அரசு நிதி உதவி அளிக்கும்:  மத்திய இணை மந்திரி
    X

    புதுவை காவல் துறையை நவீனமயமாக்க மத்திய அரசு நிதி உதவி அளிக்கும்:  மத்திய இணை மந்திரி

    புதுவை காவல்துறையை நவீன மயமாக்கவும் தேவையான உபகரணங்களை வாங்கவும் மத்திய உள்துறை தேவையான நிதியுதவி செய்யும் என மத்திய மந்திரி உறுதியளித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை கோரிமேடு போலீஸ் பயிற்சி பள்ளியில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட 130 போலீசார் மற்றும் 173 ஐ.ஆர்.பி.என். போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி கடந்த 28.1.2016-ல் தொடங்கப்பட்டது. ஒரு ஆண்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    பயிற்சி நிறைவு விழா இன்று காலை கோரிமேடு போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. விழாவுக்கு கவர்னர் கிரண்பேடி தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் நாராயணசாமி சிறப்புரையாற்றினார். போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் வரவேற்றார். விழாவில் மத்திய உள்துறை இணை மந்திரி ஹன்ஸ்ராஜ் கங்காராம் அஹிர் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற போலீசாரின் அணிவகுப்பை ஏற்றார்.

    புதுவையில் 303 காவலர்கள் கவாத்து பயிற்சி பெற்றுள்ளனர். தகுதி அடிப்படையில் இவர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளது சிறப்பானதாகும். புதுவை காவல்துறையின் முயற்சியால் இம்மாநிலம் அமைதியாக உள்ளது.

    மத்திய உள்துறை வழி காட்டுதல் படி பயிற்சிகள் தரப்பட்டுள்ளன. வெளிப்படையான வகையில் போலீசார் தேர்வு நடந்துள்ளது நாட்டுக்கே முன்மாதிரியாக உள்ளது.

    பயிற்சி முறைகளைப் பார்த்தால் எதிர்காலத்தில் பயிற்சிக் காவலர்கள் சிறந்தவர்களாக விளங்கும் வாய்ப்பு கிட்டியுள்ளது.


    பயிற்சி காவலர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு பல்வேறு காவல்துறைகளின் செயல்பாடுகளை அறிந்துள்ளனர். மேலும் காவலர்களின் தனித்தன்மைக்கு ஏற்ப பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.

    பணி அமர்த்தப்படும் போலீசார் நேர்மையாகவும், பொறுப்பையும் உணர்ந்தும் செயல்பட வேண்டும். சிறிய மாநிலங்களில் சட்டம்- ஒழுங்கை சிறப்பாக பராமரித்தமைக்காக புதுவை மாநிலம் விருது பெற்றது பாராட்டுக் குரியதாகும். தூய்மை இந்தியா திட்டத்திலும் புதுவை முன்னோடியாக திகழ்கிறது.

    புதுவை காவல்துறை சி.சி.டி.என்.எஸ். திட்டத்தையும் செம்மையாக செயல்படுத்தி வருகிறது. புதுவை காவல்துறையை நவீன மயமாக்கவும் தேவையான உபகரணங்களை வாங்கவும் மத்திய உள்துறை தேவையான நிதியுதவி செய்யும். பெருகி வரும் குற்றங்களை சமாளிக்கும் வகையில் புதுவை காவல்துறை நவீன மயமாக்கப்பட வேண்டும்.

    ரொக்கமில்லா பரிவர்த்தனை திட்டத்தையும் புதுவை மாநிலத்தில் தீவிரமாக செயல்படுத்தி நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக திகழ வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அமைச்சர் கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து மத்திய அரசின் டெல்லி பிரதிநிதி ஜான்குமார், வளர்ச்சி ஆணையர் நரேந்திரகுமார், போலீஸ் ஐ.ஜி. கண்ணன் ஜெகதீசன், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜீவ்ரஞ்சன், சந்திரன் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×