search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தொண்டி அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 22 பேர் படுகாயம்
    X

    தொண்டி அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 22 பேர் படுகாயம்

    வேன் கவிழ்ந்த விபத்தில் திருமண கோஷ்டியைச் சேர்ந்த 22 பேர் பலத்த காயமடைந்தனர்.

    தொண்டி:

    திருச்சியில் இருந்து தொண்டிக்கு ஒரு வேன் இன்று காலை வந்தது. அந்த வேனில் திருமண கோஷ்டியினர் வந்துள்ளனர்.

    தொண்டி அருகே உள்ள பழையன கோட்டை வளைவு பகுதியில் வேன் வந்தபோது எதிர்பாராத விதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வயல் வெளியில் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் வேனில் வந்த குழந்தைகள் உள்பட 22 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு திருவாடானை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள டிரைவர் மட்டும் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    Next Story
    ×